Home மலேசியா எண்ணம் இருந்தால் வழி எதிலும் சாதிக்கலாம்!

எண்ணம் இருந்தால் வழி எதிலும் சாதிக்கலாம்!

வழி இருந்தால் எதிலும் சாதிக்கலாம்!

மக்கள் நடமாட்ட கூடல் இடைவெளி கட்டுப்பாட்டு ஆணையினால் ஹரிராயாவுக்குக் கிடைத்த ஆர்டர்களை இழந்த மஹானி என்பவர் (30) ஆர்டர்களுக்கு முன்பணமாகப் பெற்ற 18

ஆயிரம் வெள்ளியை திரும்பக் கொடுக்க வேண்டிதாயிற்று. இதனால் அவர் தளர்ந்துவிடவில்லை, இவரின் தையல் கடை புக்கிட் ஜாம்புல் விறபனைத்தளத்தில் இருக்கிறது.

இக்காலக்கட்டத்தில் ஏதேனும் செய்ய வேண்டும் என்று அவர் கருத்தினார். பணியாளர்களுக்கும் விடுமுறை கொடுக்கப்பட்டுவிட்டதால் தனிமையில் என்ன செய்யமுடியும் என்று அவர் யோசித்தார்.

அந்நேரத்தில் முதல் கட்ட மக்கள் நடமாட்ட கூடல் இடைவெளி காலம் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது. அப்போது முகக்கவசம்  மிக அவசியமாக இருந்ததால் முகக்கவசங்களைத்தயாரிக்கும் ஆர்டர்களைபெற்றதாகவும் அவர் கூறினார்.

மூவாயிரம் 3000 முகக்கவசங்களைத் தயாரித்து ஆன்லைன் மூலம் விற்பனை செய்ய வேண்டிய  ஆர்டர் இது. துண்டுத்துணிகளைக் கொண்டு மூவாயிரம் முகக்கவசங்களைத் தயாரித்து, ஒன்று 5 வெள்ளி என விற்றதால் இழப்புக்கு ஈடுகட்டுவதாக அமைந்தது என்கிறார் மஹானி.

இவற்றோடு இன்னும் பிற வகைகளையும் மீதத்துணிகளில் தைத்த ஆடைகள் 15, 25 வெள்ளிகளில் விற்பனையானது. இதற்கான துணைப்பொருட்கள் கைவசமிருந்தன. அதனால் சமாளிக்க முடிந்தது என்கிறார் அவர்.

இவரின் எண்ணம் தொலைதூரக் கல்வியில் பல்கலைக்கழகப் படிப்பைத் தொடரவேண்டும் என்பதுதான் என்கிறார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version