Home உலகம் ரஷியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டியது

ரஷியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டியது

மாஸ்கோ, மே 01-

உலகம் முழுவதும் கொலைகார கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் நிமிடத்துக்கு நிமிடம் எகிறி வருகிறது. உலக அளவில் கொரோனா தொற்றுக்கு அதிகளவில் அமெரிக்கா பாதிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டில் கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை 11 லட்சத்தை நோக்கி செல்கிறது.

இந்த நிலையில் ரஷியாவிலும் கொரோனா வைரஸ் மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. அங்கு கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 5,841 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் அந்த நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 6 ஆயிரத்து 498 ஆக உயர்ந்துள்ளது.

புதிதாக பாதிக்கப்பட்டவர்களில் 2,829 பேருக்கு எந்த அறிகுறியும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் அங்கு கொரோனாவுக்கு இதுவரை 1,073 பேர் பலியாகி உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் பாதிப்பில் இருந்து 1,333 பேர் குணமடைந்த நிலையில் மொத்தமாக குணமடைந்தோர் எண்ணிக்கை 11,619 ஆக உயர்ந்துள்ளது.

 

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version