Home மலேசியா உலக பத்திரிகையாளர் தினத்தில், மலேசிய நிருபர்கள்

உலக பத்திரிகையாளர் தினத்தில், மலேசிய நிருபர்கள்

கோலாலம்பூர்:
நீதிக்கொள்கை, உண்மை பத்திரிகைச் சுதந்திரத்தை நிலைநிறுத்துவதற்கு அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது என்று தகவல் தொடர்பு ஊடகத்துறை அமைச்சர் சைபுதீன் அப்துல்லா தெரிவித்தார்.

தகவல் தொழில்நுட்பம் 21 ஆம் நூற்றாண்டு சகாப்தத்தில் இருக்கிறது. பத்திரிகைகளின் பங்கு துல்லியமான தகவல்களைப் பரப்புவது மட்டும் அல்ல. நாட்டின் நிலைத்தன்மை நல்லிணக்கத்தைப் பேணுவதுடன், அச்சுறுத்தும் தவறான தகவல்களைப் பரப்புவதிலிருந்து பொதுமக்களைப் பாதுகாப்பதும் ஆகும் என்று அவர் கூறினார்.

உலக பத்திரிகை சுதந்திரக் குறியீட்டில், மலேசியாவின் சாதனை குறித்து பெருமைப்படும் அவர், 180 நாடுகளில் 101 இடத்தில் மலேசியா இருக்கிறது என்றார். அனைத்துலகக் குறியீட்டில், நாட்டின் நிலையை மேம்படுத்துவதற்கு மட்டுமல்லாமல், தனது பங்கை மற்ற துறைகளின் அணுகுமுறையில் வைக்க வேண்டும், அதாவது அரசாங்கம், வணிகம் , பொதுத்துறை, சமூகம் ஆகியவற்றுடன் பங்காளிகளாக இருக்க வேண்டும் என்று அவர் கூறினார்

சமூகத்திற்கு, சமீபத்திய உண்மையான தகவல்களைக் கொண்டுவருவதில் முக்கிய தூணாக இருந்ததற்காகப் பத்திரிகையாளர்களைப் பாராட்டினார் அவர்.

தங்கள் கடமையைச் செய்வதில், பத்திரிகையின் கொள்கைகளையும் நெறிமுறைகளையும் நிலைநிறுத்துவதற்கான கடமையில் பொறுப்புடன் செயலாற்றியதை அவர் நினைவுபடுத்தினார்.

உலக பத்திரிகை சுதந்திர தினம், ஐக்கிய நாடுகளின் பொதுச்சபையால் 1993 இல் பிரகடனப்படுத்தப்பட்டது. பத்திரிகை சுதந்திரத்தின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த ஒவ்வோர் ஆண்டும் மே 3 பத்திரிகையாளர்தினமாகக் கொண்டாடப்பட்டும் வரப்படுகிறது.

இந்த ஆண்டு உலக பத்திரிகை சுதந்திர தினத்தின் கருப்பொருள் ‘பயமோ ஆதரவோ இல்லாத பத்திரிகை என்றிருக்கிறது. அதன் தத்துவார்த்தத்தில் செயல்படும்படி சைபுதீன் வாழ்த்து கூறினார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version