Home மலேசியா கொரோனா பேச்சு கொள்கையாகிவிட்டதே!

கொரோனா பேச்சு கொள்கையாகிவிட்டதே!

கொரோனாவின் இரண்டாம் அலை வருவதற்கான சாத்தியம் அதிகமிருப்பதாகவும் அதற்கான தயார் நிலையில் இருக்கவேண்டும் எனவும் மலேசிய மருத்துவ சங்கத்தின் தலைவர் டாக்டர் ந. ஞானபாஸ்கரன் கூறியிருக்கிறார்.

மக்கள் அதற்கான விழிப்பு நிலையில் இருப்பது மிக முக்கியம் என்கிறார் அவர்.

கோவிட்-19 முடிவடிந்துவிட்டதாகக் கருதிவிடக்கூடாது. அதிலிருந்து மீண்டுவிட்டதாவும்  பொருள்படாது. இரண்டாம் அலை இன்னும் வலுவானதாகவே இருக்கும். அதைத்தடுக்கும் முயற்சி இரட்டிப்பாக இருக்க வேண்டும் என்பதை முன்னணியாளர்கள் நன்கு உணர்ந்திருக்கின்றனர். அவர்களின் உழைப்பு இன்னும் அதிகமாகிவிடவும் கூடும்.

இரண்டாம் அலையில் எண்ணிக்கை அதிகரிப்பதைத் தடுப்பதற்கு அனைத்து வகையிலும் முழுமையான இணக்கம் முக்கியமானதாக இருக்க வேண்டும் என்கிறார் அவர். எந்தவோர் எதிர்ப்பையும் கையாளும் திறன் சுகாதாரத்துறையிடம் இருக்கிறது என்றும், அது அவர்களின் பொறுப்பு என்றும் இருந்துவிடவும் முடியாது.

மக்களிடையே பொது இணக்கம் மேம்பட்டுள்ளது என்பது உண்மைதான்.  மக்கள் நடமாட்ட கூடல் இடைவெளி  கட்டுப்பாட்டு உத்தரவு இப்போது 0.7 ஆக இருக்கிறது என்கிறது சுகாதாரம்..  மக்கள் நடமாட்ட கூடல் இடவெளி அமல்படுத்தப்படுவதற்கு முன் 3.55  என்றிருந்தது. குறைந்து வருவது ஊக்கமளிக்கும் அறிகுறியாகும். இருப்பினும், புதிய தொற்று எண்ணிக்கை  தொடர்ந்து கண்டறியப்பட்டு வருகின்றன. இவை தீவிரமாகக் கண்காணிக்கப்பட வேண்டும் என்பதும் கோரிக்கையாகும்.

எதிர்காலத்தில் இவற்றைத் தடுக்க மலேசிய பொருளாதாரம் இன்னும் சீர் செய்யப்படவேண்டும். தயார் நிலையிலும் இருக்கவேண்டும் என்று பொருளாதார நிபுணர் டான்ஸ்ரீ ரேமண்ட் நவரத்னம் கூறியிருப்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.

கோவிட் -19 நோய்த் தொற்றுகளின் இரண்டாவது அல்லது அடுத்தடுத்த அலைகளிலிருந்து மக்கள் மீண்டாலும், தற்போதைய பொருளாதார வடிவம் புதியவற்றால் பாதிக்கப்படக்கூடியதாகவே இருக்கும்  என்ற அச்சம் அதிகமாகவே இருக்கிறது.

சிறிய, நெரிசலான வீடுகளில் வசிக்கும் ஏழைகளுக்குச் சிறந்த வீடுகளை வழங்க வேண்டும். புலம் பெயர்ந்தோர், அகதிகளுக்கு குறைந்த விலையில் குடியிருப்புகள் வழங்கவும் தயார் நிலையில் பொருளாதாரம் ஒத்துழைக்க வேண்டும். இல்லையெனில், சுகாதாரக் கேடுகளின் விளைவிடமாக புறம்போக்கு குடியிருப்புகள் இருக்கும்.

மலேசிய வளங்கள் தவறாக நிர்வகிக்கப்படுகின்றன என்றும் பரவலாகப் பேசப்படுகிறது. இதிலும் உண்மை இருக்கிறது. சுயநலக்கொள்கையாளர்களுக்கு ஆதரவாக மட்டுமே செயல்படும் கொள்கைகளால் நிர்வகிக்கப்படுகின்றன என்று டான்ஶ்ரீ  நவரத்னம்  கூறுகிறார்.

பொருளாதார சீர்திருத்தங்கள் மீட்புகள் என வரும்போது,  வருமானத் தாழ்வு நிலைக்கு ஏற்றதாக,  தீர்க்க வல்லதாக அமைய வேண்டும். இது, இனத்தின் அடிப்படையில்  அமைந்ததாக இருப்பதில் அர்த்தமில்லை என்கிறார் அவர்.

படம். .பொருளாதார் நிபுணர்  RAYMONT NAVARATNAM

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version