Home மலேசியா கோவிட்-19 தொற்று இல்லை என்று உறுதி செய்யப்பட்ட மாணவர்கள் வீட்டிற்கு செல்லலாம்

கோவிட்-19 தொற்று இல்லை என்று உறுதி செய்யப்பட்ட மாணவர்கள் வீட்டிற்கு செல்லலாம்

பெட்டாலிங் ஜெயா:  தீபகற்பத்திலிருந்து திரும்பும் சபா மூன்றாம் நிலை மாணவர்கள் வீட்டிற்கு செல்வதற்கு முன்   கோவிட்-19 சோதனையில் நோய் தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்ட மாணவர்கள்  இனி மையங்களில் தனிமைப்படுத்தப்பட வேண்டியதில்லை என்று தற்காப்பு மூத்த அமைச்சர் டத்தோஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்தார்.

சபாவில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையங்கள் நிரம்பியதால் தீபகற்ப மலேசியாவில் உள்ள வளாகங்களில் இன்னும் சிக்கித் தவிக்கும் சபா மூன்றாம் நிலை மாணவர்களின் பிரச்சினையை சபா அரசு, சுகாதார அமைச்சகம் மற்றும் உயர் கல்வி அமைச்சகம் தீர்த்தன என்று அவர் மேலும் கூறினார்.

இடவசதி இல்லாததால் அவர்களை சபா மையங்களில் தனிமைப்படுத்த முடியவில்லை. கடந்த ஒரு மாதமாக மாணவர்கள் எந்த அறிகுறிகளும் இல்லாமல் வளாகத்திற்குள் இருந்ததால், வளாகங்கள் பசுமை மண்டலங்களாக கருதப்படுவதாக சுகாதார அமைச்சகம், உயர் கல்வி அமைச்சகம் மற்றும் சபா அரசு முடிவு செய்துள்ளன.

அவர்கள் சபாவுக்குச் செல்வதற்கு முன் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்றும் அதில் நோய் தொற்று இல்லையென்றால்  அவர்கள் வீடு திரும்ப அனுமதிக்கப்படுவார்கள் என்றும் ஒப்புக் கொள்ளப்பட்டது. நோய் தொற்று உறுதி செய்யப்பட்டால் முடிவு அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவார்கள்,” என்று அவர் கூறினார்.

Previous articleவீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட ரஜினி பட வில்லன்
Next articlePelajar yang tidak mengikut peraturan COVID-19

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version