Home மலேசியா பெட்டாலிங் ஜெயா ஜாலான் ஒத்மான் சந்தையில் அகன்றது முள்வேலி

பெட்டாலிங் ஜெயா ஜாலான் ஒத்மான் சந்தையில் அகன்றது முள்வேலி

கோவிட் 19 பெருந்தொற்று காரணத்தால் பல வாரமாக முள்வேலி போட்டு மூடப்பட்டிருந்த பெட்டாலிங் ஜெயா ஜாலான் ஒத்மான் சந்தை இன்று திறக்கப்பட்டது.

நள்ளிரவு 12.01 மணிக்கு போலீஸ், ராணுவத்தினர் உட்பட சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பிலிருந்து 616 பேர் முன்வேலிகளை அகற்றும் பணியில் ஈடுப்பட்டதாக பெட்டாலிங் ஜெயா மாவட்ட போலீஸ் படைத் தலைவர் நிக் எஸானி தெரிவித்தார்.

மலேசிய சுகாதார அமைச்சு இங்குள்ள 2,532 குடியிருப்பாளர்களிடம் கோவிட் பரிசோதனையை மேற்கொண்டது. அதில் 848 பேர் அந்நிய நாட்டவர்கள். மொத்தம் 13 பேரின் பரிசோதனை விவரம் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

இந்த சந்தை இனி வழக்க நிலைக்கு திரும்புகிறது. அரசாங்கம் அறிவித்த நிபந்தனைகளுக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டை பொதுமக்கள் பின்பற்றி நடக்க வேண்டும் என்று நிக் எஸானி கேட்டு கொண்டார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version