Home Hot News இணைய பகடிவதையே திவ்யநாயகியின் உயிரை பறித்திருக்கிறது – அரசு சாரா அமைப்புகள் போலீஸ் புகார்

இணைய பகடிவதையே திவ்யநாயகியின் உயிரை பறித்திருக்கிறது – அரசு சாரா அமைப்புகள் போலீஸ் புகார்

அந்நிய நாட்டினருடன் டிக் டாக் செய்த காரணத்தால் தம்மை இழிவுப்படுத்தும் வகையில் இணையத்தில் பகடிவதை செய்ததால் மனம் தாங்க முடியாமல் 20 வயது நிரம்பிய திவ்யநாயகி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அந்நிய நாட்டினருடன் அவர் செய்த டிக் டாக் காணொலியை ஜோக்கர் ஒருவன் எனும் முகநூல் பக்கத்தில் பகிர்ந்து பலர் பல விதமான கருத்துகளை அதில் தெரிவித்திருக்கின்றனர். திவ்யநாயகியை அவமானம் படுத்தும் வகையில் கிட்டத்தட்ட 300க்கும் அதிகமானோர் தங்களின் கருத்துகளை வெளிப்படுத்தியுள்ளனர். இந்த இணைய பகடிவதையை தாங்க முடியாததால் அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்று வழக்கறிஞர் தினேஷ் முத்தல் கூறினார்.

இணைய பகடிவதை தற்போது ஒரு தேசிய பிரச்சினையாக பார்க்கப்படுகிறது. சமூக வளைத்தளங்கள் நம்மை வளர்த்துக் கொள்ளவே தவிர மற்றவர்களை பகடிவதை செய்வதற்கு அல்ல. அப்பெண்னிற்கு துளியும் தொடர்பில்லாத பலரின் கருத்துக்கள் அவரை வெகுவாக பாதித்ததால் வெறு வழி இல்லாமல் கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்டார். இணைய பகடிவதை தான் அவரின் உயிரை பறித்திருக்கிறது என்று ஜோக்கர் ஒருவன் முகநூல் பக்கத்தை வழி நடத்தும் நபர் மீது இன்று போலீஸ் புகார் செய்த அவர் கூறினார்.

தலைநகரில் செயல்பட்டு வரும் சில அரசு சாரா இயக்கங்கள் இன்று செந்தூல் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இவ்விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்கள் உடனடியாக செய்யப் பட வேண்டும். இணைய பகடிவதைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று அவர்கள் கேட்டு கொண்டனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version