Home மலேசியா மாணவர்களுக்குக் கட்டணமா?

மாணவர்களுக்குக் கட்டணமா?

வெளிநாடுகளிலிருந்து திரும்பும் மாணவர்கள் கல்வி விடுமுறையில் மலேசிய திரும்பவிருக்கின்றனர். இது வழக்கமானதுதான். கல்வி விடுமுறையில் சொந்த நாட்டுக்குத் திரும்புவது இயல்பானதுதான்.

ஜூன் மாதத்திற்குப் பிறகு மலேசியா திரும்பும் மாணவர்கள் ஒவ்வொருவரும் கொரோனா சோதனைக்கு 150 வெள்ளி செலுத்த வேண்டும் என்பது ஏற்புடையதாக இல்லை என்று ஒரு தாய் மறுப்புத் தெரிவித்திருக்கிறார்.

இது நியாயமற்றது என்பது அவரின் வாதம். வெளிநாடுகளில் பயிலும் மாணவர்கள் கல்வி விடுமுறையில் வருகின்றவர்கள். அவர்களைத் தனிமைப்படுத்தும் சோதனைக்கு 150 வெள்ளி  செலுத்த வேண்டும் என்பது முறையான செயல் அல்ல. வருகின்றவர்கள் மாணவர்கள். அவர்கள் வெளிநாட்டினர் அல்லர். அவர்களுக்கு கட்டாய மருத்துவ சோதனை என்பது தேவை என்றாலும் அரசாங்கமே அதற்கான பொறுப்பை ஏற்கவேண்டும் என்று அவர் தெரிவித்திருப்பதில் அர்த்தம் இருக்கிறது.

முகாம்களில் அந்நியர்கள் இலவச சோதனையில் இருக்கின்றனர். அவர்களைவிட மாணவர்கள் எவ்விதத்தில் குறைந்திருக்கின்றனர்? மலேசிய மாணவர்கள் எப்போது திரும்பி வந்தாலும் கட்டணம் இல்லாமல் சோதனை செய்யப்படவேண்டும்.

ஜூன் முதல் நாளுக்குள் தெளிவான விளக்கம் வேண்டும் என்றும் அவர் கூறியிருக்கிறார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version