Home மலேசியா இந்து ஆலயங்களைத் திறப்பதால் விளைவு மோசமாகிவிடுமா?

இந்து ஆலயங்களைத் திறப்பதால் விளைவு மோசமாகிவிடுமா?

இந்து மக்களுக்கான வழிபாட்டு தலங்கள் திறக்கப்படுமானால் எந்த  தீங்கான விளைவுகளும் ஏற்படாது என்பதுதான் இது மக்களின் உறுதிப்பாடாய் இருக்கிறது.

இஸ்லாமியர்களின் தொழுகைக்குப் பச்சைக்கொடி காட்டப்பட்டிருக்கிறது. என்பதைக் கவனத்தில் கொள்ளலாம். இந்து மக்களின் வழிபாட்டுக்கும் வழியமைத்துக்கொடுக்க வேண்டும் என்பது பலரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

இந்து ஆலயங்களில் வழக்கமாகவே கூட்டம் அதிகம் இருக்காது. திருவிழாக்காலங்கள் தவிர்த்து மற்ற நாட்களில் கூட்டம் கூடுவதற்கான வாய்ப்பு இல்லை. எப்போதும் போலவே முப்பது பேர்கள் வரைதான் இருப்பார்கள்.

அதனால், இந்துகோவில்களுக்கு வாய்ப்பு வழங்கிவதில், பிரச்சினகள் எழாது என்று பல ஆலயங்கள் முன்மொழிந்திருக்கின்றன. இது தவறு அல்லவென்பது இந்து மக்கள் குரல் கொடுத்திருக்கின்றனர்.

மாலையிலும் காலையிலும்தான் வழிபாட்டு நேரமாக இருக்கும். இவ்விரு வேளைகளிலும் அதிகக் கூட்டம் இருக்காது. வெள்ளிக்கிழமைகளில் மட்டுமே கூட்டம் இருக்கும் என்பதால் ஆலயங்களைக்  கட்டுப்பாட்டுடன் திறக்க அனுமதிக்கலாம்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version