Home மலேசியா பூமியில் உயரும் புனிதக்கரங்கள்

பூமியில் உயரும் புனிதக்கரங்கள்

ஒரு மனிதனுக்கு நோய் என்றால் அதை விரும்பி ஏற்பதாக இருக்காது. எப்படியோ அந்நோய் உடலுக்குள் புகுந்துவிடுகிறது. அந்நோய் குடும்பம், கோத்திரம், ஆத்திரம், பாத்திரம் பார்த்தும் வருவதில்லை. அனைவருக்குமானது. காலம்தான் மாறுபடும்.

பணக்காரன் ஏழை என்றெல்லாம அதற்குத் தெரியாது .போகிற போக்கில் அள்ளிக்கொண்டு போகவும் நோய்க்குத் தெரியாது. பரம்பரையாக வரும் நோய் என்பார்கள். பரம்பரை நோயென்றால் நம் பாட்டன் திருவள்ளுவன் என்பதெல்லாம் பொய்யா? ஆதாம் ஏவாள் என்ன, வெறும் கதையா?

அனைவருக்கும் ஒரே பாட்டன் பாட்டடிதான். அவர்களுக்கும் அப்படித்தான் என்று நீட்டிக்கொண்டே போனால் ஆதாம் ஏவாள் வரை போய்தான் நிற்கும். அங்கும் ஒரு குளறுபடி இருக்கிறது.

ஒரு மேதை சொல்கிறார். அது போதையில் சொன்ன வார்த்தையாக இருக்காது. அவர்  சொன்னதிலும் உண்மை இருப்பதுபோல் மண்டையில் உறைக்கிறது.

ஆதாம் ஏவாள் என்று வைத்துக்கொண்டாலும் அவர்கள் இருவரும் யார் ? நிச்சயம் அவர்கள் ஒரு வயிற்றுப்பிள்ளை என்று கூறிவிடவும் முடியாது. அதற்கு ஆதாரம் இல்லை. சொன்ன, கேட்ட கதையைத்தான்  நம்புகிறோம். அதன் உணமைத்தேடல் தொடரவில்லை. தொடர்ந்தால் டாக்டர் பட்டத்துக்குப் பயனாக இருக்கும். அந்த மேதை சொன்ன வார்த்தை என்ன?

ஆதாம் ஏவாள் வழிதான் என்பது உண்மையானால். அவர்கள் இருவரும் அண்ணன் தங்கை உறவல்லவா? என்கிறார் அவர்.  இதற்குப்பதில் சொல்வதுபோல இன்னொரு மகா மேதை, அவர்கள் இருவரும் படைப்பு என்பதால் கணவன் மனைவி என்கிறார். இவர்கள் எந்த நிறுவனத் தாயாரிப்போ?

அண்ணன், தங்கை என்பது வாதமாக இருந்தாலும் அவர்கள் தோன்றினார்கள் என்பது தவறான பிறப்பாகிவிடும். அதே ஆதாம் ஏவாள் கனவன் மனைவி என்றால், எந்த ஆலயத்தில் திருமணம் நடந்தது. எந்த கடவுள் ஐயராக வந்திருப்பார்?

மதமே இல்லாத இருவரின் சம்மதத்தோடுதான் திருமணம் நடந்ததா? என்றெல்லாம் கேட்பது சரியல்ல. அப்போது இருவர் மட்டுமே சிருஷ்டிக்கப்பட்டதால் அவர்களின் படைப்பின் நோக்கமே சந்ததி உருவாக்கமாகத்தான் இருக்கும். அதற்குச் சாட்சிகள் அவசியமில்லை. பதிவுத்திருமண சான்றும் தேவையில்லை. இத்திருமணத்தின்போது  கோவிட் பயமோ. மக்கள் நடமாட்ட கூடல் இடைவெளி கட்டுப்பாடோ இல்லை.

இதில் என்ன சந்தேகம் என்றால் அண்ணன் தங்கை உறவாக இருக்க முடியாது எனப்து தெளிவாகத்தெரிகிறது. இறைவன் முன்னிலையில் இருவரின் திருமணம் நடந்திருப்பதால் இனி கேள்விக்கு இடமில்லை. இறைவனே மக்களாகவும் நடுவராகவும் பதிவதிகாரியாகவும் சிறப்பு வருகையாளர்களாகவும் இருந்தார்கள் என்பதையும் நம்பலாம்.

இதில் மதம் குறுக்கிட்டால் தான் வில்லங்கம் வரும். அப்போது சம் மதம் என்றுதான் முதன் மதமாக இருந்தது என்று ஒரு கதைவிடலாம். தயவு செய்து இவற்றையெல்லாம் நம்புங்கள் என்று சொல்வதல்ல.

பரம்பரை பற்றிதானே ஆரம்பித்தோம். ஆதாம் ஏவாள் பரம்பரை என்றால் கடினமான நோய் வருகிறதே எப்படி?

வெள்ளைத்துணியில் எப்படி அழுக்குச் சேர்கிறதோ அதுபோலத்தான் நல்ல உடலிலும் ந்நோய் சேர்ந்துவிடும். இதற்குப் பிறப்பின் மூலம் என்பது காரணமாக் இருக்க முடியாது.

ஒரு குழந்தைக்குப் புற்று நோய் என்பது எத்துணைக் கொடுமை. ஆதாம் ஏவாள் கூற்றுப்படி மரபணு இருந்தால் அதற்குப்பொறுப்பு யார்.

இது போன்ற குழந்தைகளை மதம் காப்பாற்றாது. நல்ல மனம் கப்பாற்றும். நல்ல மனம், வசதிகள் உள்ள மனங்கள் கூடினால் ஓர் உயிர் வாழும். மதம்தான் என்றால் எவ்வுயிரும் வீழும்.

உதவிக்கரங்கள் வானத்திலிருந்து வாராது. பூமியில் இருந்துதான் உயரவேண்டும்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version