Home உலகம் உலகின் மகிழ்ச்சி கல்வியில் இருக்கிறது

உலகின் மகிழ்ச்சி கல்வியில் இருக்கிறது

உலகின் மகிழ்ச்சியான, மக்கள் வாழும் நாடுகள் அதிகமில்லை. அந்த வகையில் சில நாடுகளே இருக்கின்றன. அவற்றில் ஒன்றாக இருக்கிறது. நார்வே என்ர நாடு இதன் தலைநகர் ஓஸ்லோ.

கடந்த ஆண்டு நான்காவது இடத்தில் இருந்த இந்நாடு, இந்த ஆண்டு முதலாம் இடத்திற்கு வந்திருக்கிறது என்பதுதான் இந்நாட்டின் சிறப்பு.

உலகின் தோற்றத்தில் இங்குள்ள மண் மற்ற நாடுகளைப்போல் தான் இருக்கிறது. மக்களெல்லாம் சராசரி மக்கள் போல்தான் இருக்கிறார்கள். உருவ மாற்றங்களில் பெரிய மாறுபாடு இல்லை. மனிதர்கள் பண்பில் அவர்கள் மட்டும் நெறிகள் மாறாமல் இயங்குவது எப்படி என்பதை முன்னுதாரணமாகக் கொள்ளலாம். அது உலகின் எந்த நாடுகளில் போர் என்றாலும் அவர்களிடம் சமாதானம் பேசுவதுதான் இந்நாட்டின் அரசியல் கொள்கையாக இருந்தது. இருக்கிறது.

அரசு எவ்வழியோ மக்களும் அவ்வழியே என்பது இவர்களின் தாரக மந்திரம். வெளிநாட்டினர் போர் நடத்துவதையே விரும்பாத இவர்கள், சொந்த நாட்டிலா அதை விரும்புவார்கள்? நிச்சயம் இத்தவற்றைச் செய்ய மாட்டார்கள்.  கற்றுக்கொள்ள வேண்டியவை அதிகமிருக்கிறது. அத்ற்கு உயர்ந்த எண்ணம் வேண்டுமே!

இங்குள்ள மக்கள் அழகான வெள்ளையர்கள். நிறபேதம் என்பது இங்கு இல்லை. இதற்கு என்ன காரணம். நாட்டின் நலம் முதலில் நிற்கிறது. மக்கள் நலம், பொதுக்கல்வி என்றெல்லாம் தாராளமான தொடர்ச்சியாக இருக்கிறது.

கல்வி ஒன்றுதான் கடவுள் என்ற பொது எண்ணத்தில் ஆட்சி நடைபெறுவதே முதல் இடத்திற்கு வரக்காரணமோ? பல்கலைக்கழகம் வரை பணம் கிடைப்பதில்  சிரமமே அருகில் வராது. படிப்புக்குத் தடையில்லை. கொரோனா கூட எட்டி நிற்கிறது.

ஒரு நாட்டில், கல்வி பொதுவானதாக இருந்தால் அந்நாடு முதலிடத்திற்கு வர எந்த இடையூறும் இருக்காது என்று அர்த்தம். அதுதான்  நார்வே. இடையூறுக்கு  நோ வே .

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version