Home மலேசியா அணி தாவல் ஆர்ப்பாட்டம் செய்வதில்லை

அணி தாவல் ஆர்ப்பாட்டம் செய்வதில்லை

கட்சித் தாவலும் ஒரு கொரோனா தொற்று நோய்தான். இதைத்தடுக்கும் எண்ணம் நம்மூர் அரசியல் அமைப்புகளுக்கு இல்லைபோல் இருக்கிறது.

அரசியல் வாதிகளை ஈர்க்க வலைவீசும் கலையை எங்கு கற்றுக்கொண்டிருப்பார்கள் என்றெல்லாம் யோசிக்க வேண்டியதில்லை. அதற்கெல்லாம் நிறைய பின்னணிப் பயிற்சிகள் இருக்கின்றன.

அரசியலில் கட்சித்தாவல் நல்ல மீன்பிடி கலையாகிவிட்டது. கலை என்றால் கலைத்தலும் ஆகும். அணிமாறும் கலை நுட்பத்தை மலேசிய அரசியல் சாதனையாளர் புத்தகத்தில் இடம்பெற முயற்சிக்கலாம்.

அணிமாறுவது காலைப் பசியாறல் போன்றது. பசிக்காவிட்டலும் பசிக்கும். அணிமாறுவது விருப்பத் தேர்வு போன்றது. அது அவரவர் சூழ்நிலைக்கான உல்லாசப் பயணம். எந்த ஊருக்கும் விசா இன்றி பயணிக்கலாம்  போன்றது.

எதற்கும் ஒரு விலை இருக்கிறது. அந்த விலை சட்ட அடிப்படையில் எதில் சேர்த்துக்கொள்ளப்படும் என்பது பரமரகசியம்.

இதன் பெயர் எந்தச் சூழ்லையிலும் இல்லை என்ற பெயரைத்தாங்கித்தான் நிற்கும். எதைக்கேட்டாலும் இல்லை. இல்லை என்பதன் அர்த்தமே வேறு.

அரசாங்க சார்பு நிறுவனங்கள் பதவியை தவறாகப் பயன்படுத்துவதும் தவறுதான், இல்லை என்பது பதிலாக இருந்தால் வேறு வழியில்லை.

அணிதாவலை ஒரு சட்டமாகக் கொண்டுவந்தால் அது எடுபடுமா? ஊஹூம், நிச்சயமாக முடியாது. அனைவருமே சந்தர்ப்ப அணிதாவலுக்கு கொக்காகக் காத்திருக்கும்போது, சட்டத்திற்குள் கொண்டுவரும் எண்ணம் எவருக்கும் கிடையாது . கொள்கை உள்ளவர்கள் அணிதாவல் செய்யமாட்டார்கள். அணிதாவல் செய்கின்றவர்கள் மாபெரும் கொள் கை வாதிகள்.

அணிதாவலத்தடுக்க முன்வைத்த கோரிக்கைகள்  எல்லாம் சுறா மீனுக்குப் பலியாகிவிட்டன. அதுபற்றிப்பேச இனி யாரும் தயாரில்லை. அதில் யாருக்கும் விருப்பமுமில்லை

பாய்மரக்கப்பலை இயக்குவதும் அற்புதக்கலைதான் . அதன் திசைதிருப்பும் கருவி யாரிடம் இருக்கிறது என்பதுதான் கேள்வி.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version