Home சினிமா அமிதாப்பச்சன் சம்மதத்துக்காக காத்திருக்கும் பார்த்திபன்

அமிதாப்பச்சன் சம்மதத்துக்காக காத்திருக்கும் பார்த்திபன்

ஹவுஸ்புல் படத்தை இந்தியில் ரீமேக் செய்ய பார்த்திபன் தயாராகி வருகிறார். இந்த படம் 1999இல் திரைக்கு வந்து வெற்றி பெற்றது. பார்த்திபனே இயக்கி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்.

விக்ரம், ரோஜா, சுவலட்சுமி, ஐஸ்வர்யா, சுவாதி, வடிவேலு ஆகியோரும் நடித்து இருந்தனர். இளையராஜா இசையமைத்து இருந்தார். தற்போது ஹவுஸ்புல் படத்தை இந்தியில் ரீமேக் செய்து இயக்க பார்த்திபன் திட்டமிட்டு உள்ளார். இதில் பார்த்திபன் கதாபாத்திரத்தில் அமிதாப்பச்சனை நடிக்க வைக்க முடிவு செய்து இருக்கிறார். இதற்காக படத்தின் டிவிடியை ஒரு தயாரிப்பாளர் மூலம் அமிதாப்பச்சனுக்கு அனுப்பி வைத்து இருப்பதாகவும் அவர் சம்மதத்துக்காக காத்து இருப்பதாகவும் பார்த்திபன் தெரிவித்து உள்ளார்.

Previous articlePengguna Jambatan Pulau Pinang nikmati diskaun RFID 20 peratus
Next articleஆடம்பர வீட்டில் கொண்டாட்டம் – 39 பேர் கைது

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version