Home மலேசியா காத்திருப்பதும் சுகம்

காத்திருப்பதும் சுகம்

புதிய அறிவிப்புகளில் ஒரு மகிழ்ச்சியான செய்தியை பிரதமர் அறிவித்திருக்கிறார் என்பதை பிரதமரின் தொடர்ச்சியான ஆய்வுகள் காட்டுகின்றன.

இதில், முக்கியமான செய்தி இளைஞர்களுக்கானது  என்பதில் பிரதமர் சமுதாய அக்கறையுடன் சிந்திப்பதைப் பாராட்டாமல் இருக்கமுடியாது.

முன்பே பதிவு செய்யப்பட்ட திருமணங்களை நடத்த அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது என்பதுதான் அது. முன்பே திட்டமிடப்பட்டு, கொரோனா பாதிப்பின் காரணமாக நின்றுபோயிருந்தால் அப்பதிவுத் திருமணங்களை நடத்துவதற்கு நடப்பு விதிமுறை  வகையளிக்கிறது என்று பிரதமர் தெரிவித்திருக்கிறார்.

இந்த அறிவிப்பு, தாகத்திற்கு மிடறு தண்ணீர் போன்றிருக்கிறது. வறட்சிக்குத் தரப்படும் தாக நீராக இது அமைந்திருக்கிறது.

இருக்கின்ற சூழ்நிலையை அனுசரித்தே விதிமுறைத் தளர்வுகள் வழங்கப்பட்டிருக்கின்றன. விதிமுறைகளைப்பற்றி நடக்கும் பயிற்சியில் மன நிறைவு இருப்பதால் பிரதமர் இத்தளர்வை வழங்கியிருக்கிறார். புதிய பதிவுகள் இதில் இடம்பெறாது என்பதிலும் நியாயம் இருக்கிறது.

பொறுத்திருந்தால் அதற்கும் காலம் கனியும். முன்பெ பதிவு செய்தவர்களுக்கு முதல் வாய்ப்பு வழங்கப்படுகிறது. பதிவு செய்தவர்கள் மீண்டும் செய்யத் தேவையில்லை. பதிவு செய்துகொள்ளும் தம்பதியர்களின் இணைப்பு அரசு ஆணைப்படி பதிவாகிவிடும்.

உறவினர்களை வரவழைத்து அங்கீகாரம் பெறவேண்டும் என்பது மட்டுமெ நிலுவையில் இருக்கிறது. அதற்கான தளர்வுகள் இன்னும் வழங்கப்படவில்லை. காத்திருப்பதிலும் ஒரு சுகம் இருக்கிறதென்ற ரகசியத்தை பிரதமரும் தெரிந்து வைத்திருக்கிறார்,

கொரோனாவுக்குப்பின் நடக்கும் அத்துணை நல்லவற்றிலும் நன்மை மட்டுமே இருக்கும். காத்திருங்கள், பழும் நழுவி பாலில் விழும் நல் தொலைவில் இல்லை.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version