Home மலேசியா புன்னகை இழக்கச்செய்யும் புற விஷயஙகள்

புன்னகை இழக்கச்செய்யும் புற விஷயஙகள்

கொரோனா தொற்றிலிருந்து வெளிப்படும் அவசரத்தில் மக்கள் சில தவற்றினைச் செய்துவிடுன்றனர். இது தவிர்க்க முடியாதது அல்ல. கவனம் கையோடு இருந்தால் தவறுகள்புறவழிப்போய்விடும்.

குழந்தைகள் மீது கவனமின்மை முதலிடத்தில் இருக்கிறது.  குழந்தைகளைக் காரில் தனித்து விடும்போதெல்லாம் துன்பம் பின் இருக்கையில் அமர்ந்துவிடுகிறது.

இது போன்ற துன்பத்தை பெரும்பான்மையினர் உணர்வதில்லை. அலட்சியம் மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்துவிடும். அலட்சியத்ததால் பொருள் சேதம் பெரிய பொருட்டாக இருக்காது. ஆனால் குழந்தை அல்லது குழந்தைகள் என்பதில் புன்னகை இல்லாமல் போய்விடும்.

இயங்கிக்கொண்டிருந்த காரில், முன்னிருக்கை இடப்புறம் தனியாக இருந்தது குழந்தை. தீ பற்றிக்கொண்டது கார். அப்போது காரின் கதவுகளும் பூட்டிக்கொண்டன.

காரின் உரிமையாளர் காரை இயங்கும் நிலையில் வைத்துவிட்டு வீட்டின் உள்ளே சென்று திரும்புவதற்குள் அத்தனையும் நடந்து விட்டது.

இப்படி நடப்பதற்கு எது காரணம் என்கிறபோது, கார் என்று கை நீட்டலாம், அதுதானே நமக்குத்தெரியும். கார் பதில் சொல்லப்போவதில்லை. நிச்சயமாக அது காரின் இயங்கு நிலையென்றும் கூறிவிட முடியாது. காரில் பொருத்தப்பட்டிருக்கும் சில கருவிகள் சிரிம் பதிவைக் கொண்டதாக இருப்பதில்லை. மலிவான விலையில் கிடைக்கும் ஒவ்வாத கருவிகளால் தீப்பிடிப்பதை தவிர்க்க முடியாது.

இது பற்றியெல்லாம் யாரும் அலட்டிக்கொள்வதே இல்லை. ஒரு பொருட்டாகவும் இருப்பதில்லை. காரின் இயந்திரம், அதன் மின்தொடர்புகள் மாற்றியமைக்கபடுவதால் தீ பற்றிக்கொள்ள நேரிடும்.

கார் இயங்கும்போது இப்படி நடந்துவிடுவதால் உயிர்ப்பலியாவிடும். இதற்கான காரணத்தை காரின்மீது வைத்துவிடுகின்றனர். காரா காரணம்? குழந்தையைக் காரில் அமர வைத்துவிட்டு காரியத்தில் இறங்குவது சரியான காரியம் அல்ல.

கார் கதவுகளின் இயக்கம் முன்புபோல் இல்லை. பெரிய மாற்றங்கள் செய்யப்பட்டிருப்பதை பல கார் உரிமையாளர்கள் அறிந்திருக்கவில்லை. அதனால் தான் குழந்தைகள் சிக்கிக்கொள்கின்றனர்.. இதற்கெல்லாம் என்னதான் வழி.

சாலை போக்குவரத்துத்துறையின் வழிகாட்டல் என்ன?

தீயைக் கட்டுப்படுத்தும் கருவி காரிலேயே பொருத்தப்பட்டிருக்க வேண்டும் என்பதும் கவனிக்கப்படவேண்டும்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version