Home இந்தியா ‘தமிழகத்தில் 316 இடங்கள் கட்டுப்பாட்டுப் பகுதிகள்’

‘தமிழகத்தில் 316 இடங்கள் கட்டுப்பாட்டுப் பகுதிகள்’

தமிழகத்தில் ஜூன் 5- ஆம் தேதி வரை கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள இடங்களாக (கட்டுப்பாட்டுப் பகுதிகள்- Containment Zones) 316 பகுதிகள் உள்ளதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், தமிழகத்தில் 37 மாவட்டங்களில் 16 மாவட்டங்களில் மட்டுமே கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் 201 இடங்கள் நோய்க் கட்டுப்பாட்டுப் (Containment Zones) பகுதிகளாக உள்ளன.

திருவண்ணாமலை- 29, கள்ளக்குறிச்சி- 5, கடலூர்- 26, அரியலூர்- 3, செங்கல்பட்டு- 7, காஞ்சிபுரம்- 13, நாகை- 9, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, கன்னியாகுமரி, தஞ்சையில் தலா ஒரு இடத்திலும், தென்காசி- 6, தூத்துக்குடி- 2, நெல்லை- 7, திருப்பத்தூர்- 4 இடங்களில் கரோனா பாதிப்பு அதிகமாக உள்ளதாக அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version