Home Hot News பொது, விரைவு பேருந்துகளின் இருக்கைகள் முழுமையாக நிரபப்படுவதற்கு அனுமதி

பொது, விரைவு பேருந்துகளின் இருக்கைகள் முழுமையாக நிரபப்படுவதற்கு அனுமதி

மீட்சியுறும் நடமாட்டக் கட்டுப்பாடு ஆணையின் போது, பொது மற்றும் விரைவு பேருந்துகளின் இருக்கைகள் முழுமையாக நிரபப்படுவதற்கு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளதாக தற்காப்பு துறை அமைச்சர் டத்தோச்ர் இஸ்மாயில் சபரி யாக்கோப் தெரிவித்தார்.

இதற்கு முன்பு அமலில் இருந்த நிபந்தனைகளுடன் கூடிய நடமாட்டக் கட்டுப்பாடு ஆணையின் போது இரு இருக்கையில் ஒருவர் மட்டுமே அமரும் நிலை இருந்தது. ஆனால் தற்போது அனைத்து இருக்கைகளும் நிரப்புவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதோடு இச்சேவைகள் குறிப்பிட்ட மணிக்கு மட்டும் செயல்படாமல் முழு நேரம் செயல்படுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இருந்தாலும் பேருந்துச் சேவை நடத்துனர்கள் வாடிக்கையாளர்களை மைசெஜாத்ரா செயலி மூலம் பதிவு செய்ய வேண்டும். அல்லது அவர்களின் தகவல்களை எழுதியும் கொள்ளலாம். நடத்துனர்கள் உட்பட பயணிகளும் கட்டாயம் முகக் கவசம் அணிந்திருக்க வேண்டும்.

பேருந்துகளில் ஏறும் பயணிகளில் உடல் வெப்ப அளவு கட்டாயம் சோதிக்கப்பட வேண்டும். பயணிகளை இறக்கும் வேலைகள் முடிந்த பின்னர் பேருந்துகளில் கட்டாயம் செனிடைஸர் தெளிக்க வேண்டும். பேருந்துகளில் நின்று கொண்டு வருபவர்கள் கூடல் இடைவெளியை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.

விமான பயணிகளின் உடல் வெப்ப நிலை நிச்சயம் சோதனை செய்ய வேண்டும். அவர்களும் முகக் கவசம் அணிந்திருக்க வேண்டும். மேலும் டாக்சி, இ ஹெய்லிங் சேவைகள் நேர வரம்பு இன்றி செயல்பட அனுமதிக்கப்படுகின்றனர். ஆனால் காரின் அளவு குறித்தே பயணிகளை ஏற்ற வேண்டும்.

பொது போக்குவரத்து சேவைகளை பயன்படுத்தும் பயணிகள் விதிகளை கட்டாயம் பின்பற்றி செயல்பட வேண்டும் என்று இஸ்மாயில் சபரி யாக்கோப் கேட்டு கொண்டார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version