Home உலகம் அதிபர் மீது அடங்கா கோபம்!

அதிபர் மீது அடங்கா கோபம்!

உலக நாடுகளில் மனிதம் வாழ்கிறது என்பதற்கான அடையாளம் செத்துப் போகாமல் இருக்கிறது. முகநூல்கள், டுவீட்டர்கள் என ஊடகத்தளங்கள் இதை உணர்த்தி வருகின்றன.

உயிர்களின் நிறம்தான் என்ன? ஆண்டவனுக்கும் அது தெரியாது. ஆண்டவன் நிறத்தைப் படக்கவில்லை. உடலின் நிறத்தையும் அவன் தேர்வு செய்யவில்லை. அது மண்ணின் நிறம்.

ஆனாலும் பிரிவினைக் கொலைகள் நிகழ்கின்றன. மனிதங்கள் மிருகங்களாகிவிடுகின்றன. இதை நிகழ்த்துவது இறைவன் அல்லன். ஆனாலும் நிகழ்கின்றன.

பூமியின் நிலம் யாருக்குச் சொந்தம், இந்த நிலைத்தை எந்தத் தொழிற்சாலையில் உருவாக்கினார்கள். இதற்குசொந்தக்காரன் ஆண்டவன் இல்லையென்றால் சூரியன் என்பதாக ஆய்வுகளின் ஆதாரங்கள்  இருக்கின்றன. ஆனாலும் பிற சொத்துக்கு மனிதன் அடித்துக்கொள்கிறானே!.

சூரியன் கொடுத்த துரும்பு பூமியானது என்றால், பல்லுயிர்கள் வாழ இறைவன் கொடுத்த கொடை தானே!. வாழத்தான் உயிர். அதை எடுக்கும், தடுக்கும் உரிமை எவருக்கும் கிடையாது. அந்தத் தவற்றை மனிதன் செய்யத் துணிந்திருக்கிறான். அதற்கான எச்சரிக்கைதான் கொரோனாவா தொற்று என்று சொன்னால் ஏற்பார்களா?

அதுபோட்டும், தங்களை அமெரிக்கர்கர்கள் என்று அடையாளப்படுத்திக்கொண்டு அதே பூமியில் உள்ள ஓர் அழகிய மனிதனைக் கொன்றது தவறுதானே! இதற்கு உலகம் குரல் கொடுத்திருக்கிறது. இதில் எந்த நாடு என்பதல்ல.

கொரியாவும் இதில் இணைந்திருக்கிறது. கொரிய மக்களுக்கும் மனித நேயப்பண்புகள் இருக்கின்றன. அவர்களுக்கும் கருணை மனம் படைத்தவர்கள். மனிதத்திற்காக, அதனால் தங்கள் நாட்டில் இருந்துகொண்டே எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர்.

இது அமெரிக்க மக்கள் மீதான கோபம் அல்ல. அதிபர் மீது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version