Home Hot News எரிக் போல்சன் நியமனம் – பாஸ் கட்சி எதிர்க்கிறது

எரிக் போல்சன் நியமனம் – பாஸ் கட்சி எதிர்க்கிறது

தொலைத்தொடர்பு மற்றும் பல்லூடகத் துறையின் ஆலோசனை மன்றக் குழுவில் எரிக் போல்சன் நியமனம் செய்யப்பட்டிருப்பதை பாஸ் கட்சியின் பாசீர் மாஸ் நாடாளுமன்ற உறப்பினர் அமாட் ஃபட்லி ஷாரி கடுமையாக எதிர்த்துள்ளார்.

எந்த நோக்கத்திற்காக இவருக்கு இந்தப் பதவி வழங்கப்பட்டுள்ளது. தனிமனிதரான இவரின் நியமனத்தை எங்களால் ஏற்றுக் கொள்ள முடியாது என்றார். எரிக் போல்சன் நியமனத்தை எதிர்த்து இந்நாட்டில் உள்ள முஸ்லிம் மக்கள் மிகப்பெரிய எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

ஆசியான் மனித உரிமை ஆணையத்தில் மலேசியப் பிரதிநிதியாக இருக்கும் இவர் உட்பட 15 பேரை தொலைத்தொடர்பு மற்றும் பல்லூடகத் துறையின் ஆலோசனை மன்றக் குழுவில் அதன் அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் அப்துல்லா நியமித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவரின் நியமனத்தை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் அப்துல்லா உடனடியாக மீட்டுக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். இவரின் நியமனத்தை டத்தோஸ்ரீ சைபுடின் அப்துல்லா மறுபரிசீலனை செய்ய வேண்டும். இல்லையேல் முஸ்லிம் மக்களிடையே மிகப்பெரிய எதிர்ப்பு வரும் என்று அவர் எச்சரித்தார்.

Previous articleஉருவம் இருந்தால் தானே நிழல் தெரியும்!
Next articleஉலகளாவிய அடிப்படை வருமானத் திட்டத்தைத் தொடங்குங்கள்

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version