Home மலேசியா பொதுமண்டபங்கள் திறப்பு எப்போது?

பொதுமண்டபங்கள் திறப்பு எப்போது?

பொது மண்டபங்கள் கல்யாண மண்டபங்கள் திறப்பு எப்போது? கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக இதுதான் கேள்விகளாக இருக்கின்றன. பொதுமண்டபங்களுக்கு அனுமதி இல்லை என்பது நடைமுறைக்கு ஏற்றதுதான். இது சுகாதாரம்.  இதில் எவருக்கும் சந்தேகமில்லை.

பல திருமணப் பதிவுகள் குடுபம்பத்தை மட்டும் கொண்டு முடிந்துவிட்டன. ஆனாலும், ஊர் மக்கள், நண்பர்களை அழைத்து அவர்களுக்குத் தெரிவிப்பதும்  பல பேரியோர்களின் ஆசீர்வாதம் பெறுவதற்கும் ஒரு நாளைத் தேர்வுசெய்வார்கள். அந்நாள்தான் திருமண விருந்தாகவும் திருமணத்தை அங்கீகரிக்கின்ற நாளாகவும் அமையும்.

பதிவுத் திருமணத்தைவிட அந்நாளே சிறப்பானதாக இருக்கும். அந்நாளை சிறப்பானதாக மாற்றிக்கொள்ள விருந்து முதன்மையாக இருக்கும். இதற்கு பெரிய அரங்கும் தேவைப்படும். அந்த அரங்குகள் எல்லாம் பூட்டப்பட்டு கொரோனாவால் வெறிச்சோடிக் கிடக்கின்றன.

அரசு எடுத்த முடிவு சரிதான் என்பதில் அனைவருக்கும் உடன் பாடு உண்டு. ஆனாலும், பொது மண்டபங்களையும்  கல்யாண மண்டபங்களையும் நடந்துகின்ற மண்டப உரிமையாளர்களின் உணவுந்தட்டில் பரிமாற முடியாமல் இருக்கும்  சூழ்லையையும் அரசு, சுகாதாரத்துறை கவனிக்கவேண்டும் என்பதுதான் இன்றைய கோரிக்கை.

முப்பது என்ற எண்ணிக்கை என்பதில் திருப்தியில்லை. அதற்காகத்தான் பொது, அல்லது கல்யாண மண்டபங்களை மக்கள் நாடுகின்றனர். கல்யாண மண்டபங்களில் விருந்து என்பது அனைத்துக்கும் வசதியாக இருக்கும். பொதுமக்கள், விருந்தினர்கள் வருவதற்கும்  கார்களை நிறுத்துவத்ற்கும் வசதி தாராளாமாக இருக்கும்.

இவையாவும் வசதிக்குட்பட்ட செய்தி. இதற்கு அப்பாலும் பொதுமண்டபத்தில் பணி புரியும் பணியாளர்கள், நிரந்தரப் பணியாளர்கள் கதி அதோ கதியாகிவிட்டது, பலர் வேலை தேடி வெகுதூரம் போக வேண்டி வந்துவிட்டது. அதற்கும் போக்குவரத்துத்தடை முட்டுக்கட்டையாகி விட்டது.

கல்யாண மண்டபம் பாதுகாப்பானவை என்பதையும் கவனிக்க வேண்டும். ஐநூறுபேர் கூடுவதற்கு அனுமதிக்கலாம். இதனால், பாதிப்பு வரும் என்பதில்லை. நடைமுறை இயக்கக்கட்டுப்பாட்டுடன் அனுமதித்தால் பல ஆயிரம்பேர் வேலையில் இணந்துகொள்ள முடியும். காய்ந்து கிடக்கும் பூமியில் மழைபெய்ததுபோலிருக்கும்!

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version