Home Hot News 96 எம்பிகளே அன்வாருக்கு ஆதரவு

96 எம்பிகளே அன்வாருக்கு ஆதரவு

நம்பிக்கை கூட்டணி பிளஸ் பிரதமர் வேட்பாளராகத் தேர்வு செய்யப்படுவதற்கு கெஅடிலான் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிற்கு போதுமான ஆதரவு இல்லை என்று ஜசெகாவும் அமானா கட்சியும் கூறுகின்றன.

அன்வாருக்கு அதிகப்பட்சமாக 96 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவே கிடைக்கும் எனவும் அவர் ககாசான் பார்ட்டி சரவாக் எனும் ஜிஎஸ்பியின் ஆதரவை பெறத் தவறி விட்டார் எனவும் ஜசெகவும் அமானாவும் தங்கள் அறிக்கையில் கூறியுள்ளன.

அன்வாருக்கு பெரும்பான்மை ஆதரவு கிடைக்காத பட்சத்தில் நாட்டின் 9ஆவது பிரதமராக பெர்சத்து கட்சியின் முன்னாள் அவைத் தலைவர் துன் டாக்டர் மகாதீரை ஆதரிப்பது என நம்பிக்கை கூட்டணித் தலைமைத்துவ மன்றத்தில் முடிவெ செய்யப்பட்டது.

இந்த முடிவு எடுக்கப்பட்ட பிறகும் டத்தோஸ்ரீ அன்வார்தான் பிரதமர் வேட்பாளராகத் தேர்வு பெற வேண்டும் என அந்தக் கட்சி தொடர்ந்து வலியுறுத்துவது வியப்பை அளிக்கிறது என்று ஜசெகவும் அமானாவும் கூறியுள்ளன.

Previous article77 வெள்ளிக்கு குறைவாக கட்டணம் செலுத்துவோருக்கு 3 மாதம் இலவச மின்சாரம்
Next articleவேனில் சிக்கிக் கொண்டவர் காப்பாற்றப்பட்டார்

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version