Home மலேசியா KLSICCI இன் சமூக கடப்பாட்டு உதவி

KLSICCI இன் சமூக கடப்பாட்டு உதவி

கோவிட்-19 உலகையே உலுக்கி வரும் வேளையில் மலேசியாவும் அத்தொற்றில் பாதிப்புள்ளானது. ஏறக்குறைய 3 மாதங்கள் மக்கள் நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவு பிறக்கப்பட்டிருந்தது. ஜூன் 9ஆம் தேதி அக்கட்டுபாடு சற்று தளர்த்தப்பட்டிருக்கிறது.

கோவிட்-19 காலகட்டத்தில் பி40 பிரிவினர் பல இன்னல்களை எதிர்நோக்கி வருகின்றனர். அவர்களுக்கு உதவும் பொருட்டு கோலாலம்பூர்- சிலாங்கூர் இந்திய வர்த்தக சங்கம் (கேஎல்எஸ்ஐசிசிஐ) சமூக கடப்பாட்டு உதவிகளை வழங்கியதாக சங்கத்தின் தலைவர் டத்தோ ராமநாதன் தெரிவித்தார். உணவின்றி யாரும் இருக்கக் கூடாது என்ற எண்ணத்தில் இந்த உதவிப் பொருட்கள் வழங்கப்பட்டன என்றார். நாம் வழங்கும் பொருட்கள் சரியான நபர்களிடம் சென்றடைய வேண்டும் என்பதால்  எங்கள் சங்கத்தின் துணை செயலாளரும் ஏரா சூரியா அறவாரியத்தின் இயக்குநருமான டோனி கிளிப்போர்ட் இந்த பொறுப்பினை ஏற்று நடத்தியதாக கூறினார்.

இந்த உதவி திட்டம் குறித்து டோனி கிளிப்போர்ட் கூறுகையில் கேஎல்எஸ்ஐசிசிஐ வழி 130  குடும்பங்களுக்கு அத்திவாசிய உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டன என்றார். அந்த பொருட்களை தன்னார்வல தொண்டர்களின் ஒப்படைக்கப்படும் நிகழ்ச்சி ஏரா சூரியா அறவாரிய அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கேஎல்எஸ்ஐசிசிஐ  செயலாளர், நிர்வாக உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version