Home ஆன்மிகம் கிரகணத்தின்போது கோவில்கள் மூடப்படுவது ஏன்?

கிரகணத்தின்போது கோவில்கள் மூடப்படுவது ஏன்?

சூரிய, சந்திர கிரகண காலங்களில் கோவில்களை மூடுவது எதற்கு? சூரிய கிரகணமோ, சந்திர கிரகணமோ நிகழும் போது அதிகமாக எதிர்மறை சக்திகள் வெளிப்படும்.

இதனால் எதிர்மறை சக்தி உருவாகும். இதன் தாக்கம் கோவிலுக்குள் வரக்கூடாது என்பதற்காகவும் கோவிலுக்கு வரும் பக்தர்களை அந்த எதிர்மறை சக்தி பாதிக்கக் கூடாது என்பதற்காகவும்தான் கோவில்களை மூடி விடுகின்றனர்.

சூரியன், சந்திரன், பூமி ஒரே நேர்கோட்டில் வரும்போது கிரகணம் நிகழ்கிறது. சந்திரனின் நிழல் சூரியனை மறைக்கிறது. அதே நேரத்தில் சூரியன், சந்திரன் கிரகங்களை ராகு அல்லது கேது விழுங்கும் நிகழ்வுதான் சூரிய, சந்திர கிரகணம் என்று புராண கதைகளில் சொல்லப்படுகின்றன.

இது கற்பனை என்றாலும் அறிவியல் இருக்கிறது. அறிவியலைப் புரியவைப்பதில் சிரமம் இருக்கிறது. அதற்காகவே புராணக்கதைகள் புணைவுகளாக தோன்றின.

அமாவாசை நாளில் சூரிய கிரகணமும், பெளர்ணமி நாளில் சந்திர கிரகணம் ஏற்படுவது வழக்கம். பூமி சூரியனைச் சுற்றுகின்றது. சந்திரன் பூமியைச் சுற்றுகின்றது. கிரகங்கள் சுற்றும்போது ஒரு சில நேரங்களில் ஒரே நேர்கோட்டில் சந்திக்கும். அப்போது நிழல் மறைக்கும். சூரியனுக்கும் பூமிக்கும் இடையே ஒரே நேர்கோட்டில் சந்திரன் வரும் போது சூரிய கிரகணம் ஏற்படுகிறது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version