Home மலேசியா கொரோனா பயம் தெளிரிந்திருக்கிறாதா?

கொரோனா பயம் தெளிரிந்திருக்கிறாதா?

தொடாதே! இப்படித்தான் எங்கு சென்றாலும் எச்சரிக்கை ஒலிஅலை அனைவரையும் அச்சுறுத்திக்கொண்டிருக்கிறது. ஆனாலும் மக்கள் துணிச்சலோடு நடமாடுவதற்கு புதிய சூழல் உறுதுணையாகவே இருக்கிறது.

இன்று, நாட்டின் புழக்கம் இயல்பான நிலைக்கு மாறிவிட்டது போன்ற நிழல்தோற்றம் தெரிகிறது. இடைநிலைப்பள்ளி திறப்பு மாணவர்களுக்குப் புதிய தெம்பை வழங்கியிருக்கிறது. ஆனாலும் கட்டுப்பாட்டில் இருப்பது என்பது சற்று சிரமமாக இருந்தாலும் எல்லாம் பழகிப்போய்விடும்.

இவ்வாரத்தில் அனைத்தும் பழக்கத்திற்குள் கட்டுப்பட்டுவிடும். இடைநில்லைப்பள்ளி மாணவர்கள்  பள்ளியில் எப்படியெல்லாம இருக்க வேண்டும் என்பதை ஆச்சிரியர்கள் புரிய வைப்பார்கள். உடல் நிலை பாதிப்புற்ற மாணவர்கள் பள்ளிக்கு வரவேண்டாம் என்பதும் முன் யோசனைதான்.

பள்ளிக்குச்செல்லும் மாணவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய எஸ் ஓ பி நிபந்தனைகள் முழுமையாக அறியப்படல் அவசியம். இதில், முன்பைவிட ஆசிரியர்களுக்கு அதிக பொறுப்பு இருக்கிறது.

உணவருந்தும்  இடம், கூடல் இடைவெளி என்றெல்லாம் கவனிக்க வேண்டும். அதோடு கழிப்பறை சுகாதாரம் என்றெல்லாம இருக்கிறது. பொறுப்புள்ள  மாணவர்களுக்கு அதிகம் கூற வேண்டியதில்லை.

விளையாட்டுத்தனம் மிகுந்த மாணவர்களைத்தான் அதிகம் கவனிக்க வேண்டியிருக்கிறது. இவர்கள் எதையெல்லாம் செய்ய வேண்டம் என்று சொல்கிறோமோ அதைத்தான் செய்வார்கள். ஆதலால், ஆசிரியர்களின் பொறுப்பு யதார்த்தமாக இருக்கவே கூடாது.

பள்ளிப் பேருந்து இடவசதி எல்லாம் இதில் இருக்கிறது. இவற்றைக் கட்டுப்படுத்த முடியுமா என்றெல்லாம் சந்தேகம் எழாமல் இல்லை.. பள்ளி முடிந்து இல்லம் திரும்பியதும் மாணவர்கள் செய்யவேண்டியது, செய்யக் கூடாதது என்ன என்பதெல்லாம் சொல்லித் தரவேண்டும். மாணவர்கள் அதைக்கடைபிடிக்கிறார்களா என்பதும் கவனிக்கப்படவேண்டும்.

இதில் முகக்கவசப்பயன்பாடு, அவற்றைப்பயன் படுத்தும் முறை இன்னும் கேள்வியாகவே இருக்கிறது. முகக்கவசங்கள் வழங்கப்படுமா? பழையவற்றைப் பத்திரமாக அகற்றும் முறை என்றெல்லாம் இருக்கிறது.

பொதுவாக, பாடத்தோடு பாதுகாப்பு அவசியத்தை அதிகமாகவே கற்றுத்தர வேண்டியிருப்பதால் அவசியமில்லாமல் எதையும் தொடாதே என்பதிலும் மிகுந்த அக்கறையோடு இருக்க வேண்டியவர்கள் ஆசிரியர்களாகத்தான் இருப்பார்கள்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version