Home உலகம் அமெரிக்கா – 25 லட்சத்தை கடந்தது கொரோனா பாதிப்பு

அமெரிக்கா – 25 லட்சத்தை கடந்தது கொரோனா பாதிப்பு

உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் அமெரிக்காவில் கோரத் தாண்டவம் ஆடி வருகிறது. கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள் வரிசையில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது.    இந்நிலையில், அமெரிக்காவில் ஒரே நாளில் 37 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்துள்ளனர். கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 25 லட்சத்தைத் தாண்டியுள்ளது.
மேலும், கொரோனா வைரசுக்கு பலியானோர் எண்ணிக்கை 1.26 லட்சத்தைத் தாண்டியது. மேலும், கொரோனா தொற்றில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 10.50 லட்சத்தை நெருங்குகிறது .

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version