Home மலேசியா இன்னும் உலவுகிறது கோவிட்

இன்னும் உலவுகிறது கோவிட்

PUTRAJAYA, 5 April -- Menteri Kanan (Kluster Keselamatan) merangkap Menteri Pertahanan Datuk Seri Ismail Sabri Yaakob ketika sidang media selepas mempengerusikan Mesyuarat Khas Menteri Menteri Berkenaan Pelaksanaan Perintah Kawalan Pergerakan di bangunan Perdana Putra hari ini. Beliau berkata proses nyah cemar dilaksanakan di 83 kawasan di 11 negeri semalam. --fotoBERNAMA (2020) HAK CIPTA TERPELIHARA

கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்தில் (கே.எல்.ஐ.ஏ) ஜூன் 10 முதல் ஜூன் 26 வரை கோவிட் -19 க்கான  சோதனைக்கு உடபடுத்தப்பட்ட   6,155 பேர்களில் 34 பேர்களுக்கு மட்டுமே அறிகுறி தென்பட்டது  என்று டத்தோஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தெரிவித்துள்ளார்.

மீதமுள்ள 6,121 பேர்கள் சோதிக்கப்பட்டு, தற்போது கட்டாய வீட்டு தனிமைப்படுத்தலுக்கு உட்பட்டுள்ளனர் என்றார் அவர்.

எதிர்ம்றையான் 34 பேர்களும் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர் என்று அவர் அறிக்கையொன்றில்  தெரிவித்தார்.

பிலிப்பைன்ஸ், நேபாளம், சிங்கப்பூர், ஐக்கிய அரபு அமீரகம், சீனா, இந்தோனேசியா, ஹாங்காங், கம்போடியா, கத்தார், பாகிஸ்தான் , புருணை ஆகிய நாடுகளில் இருந்து 425 மலேசியர்கள்  அனைத்துலக விமான நிலையம் வழியாக நாடு திரும்பினர். திரும்பி வந்தவர்களில் மூன்று பேர் தொற்றுக்கான சோதனை  மேற்கொண்டனர்.

மலேசியாவை விட்டு வெளியேற விரும்பும் வெளிநாட்டினரை அவசரகால சந்தர்ப்பங்களில் அல்லது மருத்துவ காரணங்களுக்காக மட்டுமே அனுமதிக்க அரசாங்கம் முடிவு செய்ததாக இஸ்மாயில் சப்ரி கூறினார்.

இது, ஒரு வழிப்பயணமாக இருந்தால் எந்தவொரு வெளிநாட்டினரும் தங்கள் சொந்த நாட்டிற்கு திரும்ப,  அரசாங்கம் தடையாக இருக்காது .

பயண ஆவணங்கள் இல்லாத வெளிநாட்டினர் முதலில் அந்தந்த தூதரகங்களிலிருந்து ஆவணங்களைப் பெற வேண்டும் என்று அவர் கூறினார்.

மலேசிய மீன்பிடிக் கப்பல்களில் பணியாற்றும் வெளிநாட்டினருக்கு எந்தத் தடையும் இல்லை என்றும் அவர் கூறினார்.

இருப்பினும், இந்த வெளிநாட்டினர் குடிவரவுத் துறையின்  தனிமைப்படுத்தல் உட்பட கோவிட் -19 சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் . முதலாளிகள் அவர்களுக்கு வசிக்கும் இடங்களை வழங்க வேண்டும்.

Previous articleபணக்கார சீனர்கள் என்ற மகாதீரின் கருத்து ஏற்புடையதல்ல
Next articleதூவானம் விட்டும் தொற்றுவிடவில்லை

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version