Home மலேசியா போலீசாரால் தவறாக நடத்தப்பட்டனாரா? விசாரணை தொடர்கிறது

போலீசாரால் தவறாக நடத்தப்பட்டனாரா? விசாரணை தொடர்கிறது

ஈப்போ: மருத்துவமனை ஆதரவு மற்றும் அதனுடன் இணைந்த சேவைகளில் உள்ள தேசிய தொழிலாளர் சங்கத்தைச் சேர்ந்த ஐந்து ஆர்வலர்கள் காவல்துறையினரால் தவறாக நடத்தப்பட்டதாகக் கூறப்படும் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாக பேராக்  மாவட்ட காவல்துறைத் தலைவர்  டத்தோ ரசாருதீன் ஹுசைன் (படம்) தெரிவித்துள்ளார்.

இந்த விஷயம் நடந்ததா என்று நாங்கள் இன்னும் விசாரித்து வருகிறோம். எங்கள் தரப்பிலிருந்து தவறான நடத்தை இருக்கக்கூடும். மேலும் முழுமையான விசாரணை நடத்தப்படும் என்று அவர் திங்களன்று (ஜூன் 29)  எஸ்எம்ஜேகே சாம் டெட் வருகைக்கு பின்னர் செய்தியாளர்களிடம் கூறினார். விசாரணை ஆவணங்கள் முடிந்ததும் மேல் நடவடிக்கைகளுக்காக மாநில அரசு வழக்கறிஞரிடம் சமர்ப்பிக்கப்படும் என்றார்.

ஜூன் 2ஆம் தேதி ராஜா பெர்மிசூரி பைனுன் மருத்துவமனைக்கு அருகே கூடியிருந்ததற்காக தொழிற்சங்கத்தைச் சேர்ந்த 5 ஆர்வலர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து  நிபந்தனை இயக்கக் கட்டுப்பாட்டு ஆணையை (எம்.சி.ஓ) மீறியதற்காக தவறாக தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், காவல்துறையினர் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியதாகவும் அவர்கள் போலீஸ் புகார் செய்தனர். ஐந்து ஆர்வலர்கள் மீது ஜூன் 4ஆம் தேதி குற்றம் சாட்டப்பட்டது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version