Home தொழில்நுட்பம் குறைந்த விலையில் உருவாகும் சாம்சங் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்

குறைந்த விலையில் உருவாகும் சாம்சங் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்

புதிய கேலக்ஸி ஃபோல்டு லைட் ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் பற்றி இதுவரை எவ்வித தகவலும் இல்லை. எனினும், ஏற்கனவே வெளியான தகவல்களின் படி கேலக்ஸி ஃபோல்டு லைட் ஸ்மார்ட்போன் இந்த ஆண்டு ஆகஸ்ட் 5 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படும் என கூறப்பட்டது. எனினும், கேலக்ஸி அன்பேக்டு விழாவில் அறிமுகம் செய்யப்பட இருந்த கேலக்ஸி ஃபோல்டு லைட் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. சாம்சங் சார்பில் இதுவரை எவ்வித தகவலும் வழங்கப்படவில்லை. தற்சமயம் கேலக்ஸி ஃபோல்டு ஸ்மார்ட்போன் ரூ. 1.62 லட்சம் விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
தற்போதைய தகவல் உண்மையாகும் பட்சத்தில் கேலக்ஸி ஃபோல்டு ஸ்மார்ட்போனின் சில அம்சங்கள் நீக்கப்படலாம் என கூறப்படுகிறது. மேலும் லைட் வேரியண்ட்டில் 2018, 2019 மற்றும் 2020 ஆண்டு பாகங்கள் பயன்படுத்தப்படலாம் என்றும் தெரிகிறது. இதில் ஸ்னாப்டிராகன் 865 பிராசஸர், 256GB மெமரி உள்ளிட்டவை வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. மேலும் புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் வெளிப்புறம் கேலக்ஸி இசட் ஃப்ளிப் மாடலில் இருந்ததை போன்று சிறிய டிஸ்ப்ளே வழங்கப்படும் என கூறப்படுகிறது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version