Home மலேசியா 11 பொருட்களை திருடியதாக மருத்துவர் மீது குற்றச்சாட்டு

11 பொருட்களை திருடியதாக மருத்துவர் மீது குற்றச்சாட்டு

ஜார்ஜ் டவுன்: ஜாலான் கெல்வேயிலுள்ள  கெர்னி  பார்க் ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்பில்  பல வீடுகளுக்குள் நுழைந்து  11  பொருட்களை திருடியதாக  நம்பப்படும் பினாங்கு மருத்துவமனையைச் சேர்ந்த 39 வயது மருத்துவர் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

நியோ சூன் கா மீதான குற்றச்சாட்டுகள் இங்குள்ள இரண்டு தனித்தனி மாஜிஸ்திரேட் நீதிமன்றங்களில் வாசிக்கப்பட்டன.  அவற்றில் இரண்டு திருடப்பட்ட அடையாள அட்டைகள் மற்றும் வோங் வீ யே மற்றும் ஓங் சோங் சோவ் ஜொனாதன் ஆகியோரின் பாஸ்போர்ட் ஆகியவை இருந்தன. திருடப்பட்ட சொத்தை நேர்மையற்ற முறையில் பெற்றதற்காக தண்டனைச் சட்டத்தின் பிரிவு 411 இன் கீழ் உள்ள குற்றச்சாட்டுக்கு ஐந்தாண்டு சிறைத்தண்டனையும் அல்லது அபராதமும்  விதிக்கப்படும்.

நியோவின் வழக்கறிஞர் கே.மகேந்திரன் மாஜிஸ்திரேட் ஜமாலியா அப்த் மனாப்பிடம் எனது கட்சிக்காரர் ஒரு மனநல நோயாளி என்றும் புக்கிட் மெர்தாஜம் மருத்துவமனையிலிருந்து மருத்துவரின் கடிதத்தை ஆதாரமாக சமர்ப்பித்ததாகவும் கூறினார்.  அவரது மன நிலையை  உறுதிப்படுத்த நியோவை ஒரு மனநல மருத்துவர் பரிசோதிக்க வேண்டும் என்றும் மகேந்திரன் கேட்டார்.

ஜமாலியா பின்னர் நியோவை பேராக்கிலுள்ள பஹாகியா உலு கிந்தா மருத்துவமனைக்கு  மனநல மதிப்பீட்டிற்காக ஒரு மாதத்திற்கு அனுப்ப உத்தரவிட்டார். பின்னர் ஜூலை 29ஆம் தேதி மீண்டும் செவிமெடுக்கப்படும். நியோவிடம் எந்த மனுவும் பதிவு செய்யப்படவில்லை.

மற்றொரு வழக்கு  நீதிமன்றத்தில், நியோவுக்கு எதிரான மீதமுள்ள குற்றச்சாட்டுகள் மாஜிஸ்திரேட் ரோஸ்னி அப்து ராட்ஸுவான் முன் வாசிக்கப்பட்டன. வழக்குத் தொடர்ந்த டிபிபி முகமது சியாபிக் நஸ்ருல்லா சலீம் அலி செய்தியாளர்களிடம் கூறுகையில், 11 குற்றச்சாட்டுகள் தேசிய பதிவு விதிமுறைகள் 1990 இன் விதி 25 (1) (ஓ) இன் கீழ் மற்றொரு நபரின் மைகாட் வைத்திருப்பதற்காக செய்யப்பட்டன.

ஏப்ரல் 23 அன்று அந்த அடுக்குமாடி தொடர்ச்சியான களவு  பற்றிய விசாரணைகளுக்கு உதவ  போலீஸ்  குழு நியோவை அழைத்துச் சென்றது. பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்பட்ட இழப்பு 493,615 வெள்ளி என மதிப்பிடப்பட்டதாகவும் இத்தொகை 2014 முதல் 22  சம்பவங்களில்  தொடர்புடையவை என்றும் போலீசார்  நம்புவதாக அறியப்படுகிறது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version