Home மலேசியா நாய்கள் ஜாக்கிரதை

நாய்கள் ஜாக்கிரதை

நாய்கள் ஜாக்கிரதை என்றுதான் பலவீடுகளில் அறிவிப்புப் பலகை வைத்திருப்பார்கள். உறவினர்களோ, அல்லது நண்பர்களோ வீட்டிற்கு வருகின்றவர்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என்பதற்காக  இந்த அறிவிப்புப்பலகையை வைத்திருப்பார்கள்.

இதற்கான அர்த்தம் அதுவல்ல என்று இப்போது ஆகிவருகிறது. இப்போது அதற்கான அர்த்தம் வீட்டில் உள்ள நாய்களுக்காக நாய்கள் ஜாக்கிரதை  என்றாகிவிட்டது.

வீட்டில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகளில் விதவிதமான நாய்கள் இருக்கும். சமயம் பார்த்து இவற்றைக் கடத்தும் கும்பல் மோட்டார் சைக்கிளில் சுற்றித் திரிகின்றனர். சிறிய வகை நாய்களைக் காரில் கொண்டு செல்கின்றவர்கள் அல்லது கொண்டுவருகின்றவர்களிடமிருந்து அபகரிக்கும் நூதன திருட்டு உருவாகிவருக்கிறது.

சில மணி நெரம் கழித்து நாய் உரிமையாளர்களிடமே கடத்தப்பட்ட நாய் பேரம் பேசப்பட்டு விற்கப்படும் முதல் இல்லாத வணிக யுக்தியில் பலர் முளைக்கத்தொடங்கிவிட்டனர்.

இன்னும் சிலர் கூடுதலாக, வீட்டில் உள்ள நாய்களுக்குக் குறிவைத்து அபகரித்தபின் தொலைபேசி எண்ணையும் விட்டுச்செல்கின்றர். அல்லது அழைக்கின்றனர்.

ஒருவரின் நாய் இந்த யுக்தியில் கடத்தபட்டு 1,000 வெள்ளிக்குப் பேரம் பேசபட்டு 500 வெளிக்கு குறைக்கப்பட்டதாகத் தெரியவருகிறது.

இதில், போலீஸ் புகார் செய்வதற்கு அவகாசமில்லை. நாய்க்கு ஏதேனும் ஏற்படும் என்று அஞ்சுவதால் பேரத்திற்கு இணங்குவதாக தெரிவிக்கப்படுகிறது. ஆனாலும், புகார்கள் கிடைத்திருப்பதால் இவர்களை சுற்றிவளைக்க முழுமூச்சாக இறங்கியுள்ளதாக  பெட்டாலிங் ஜெயா ஏசிபி எஸானி முகமட் ஃபைசால் தெரிவித்துள்ளார்.

முழுமையாக  கறுப்பு ஏற்றப்பட்ட  சிவப்பு நிறத்திலான காரிலும் நாய் கடத்தல்காரர்கள் வலம் வருகின்றனர் என்பதால், நாய்கள் ஜாக்கிரதை என்று எச்சரிக்க வேண்டியிருக்கிறது

இனிமேல் அறிவிப்புப் பலகையில் நாய்கள் கடத்தல், ஜாக்கிரதை என்று போடவேண்டியும் வரலாம்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version