Home மலேசியா நிலத்திற்கழகு நீரின் அளவு

நிலத்திற்கழகு நீரின் அளவு

ஒரு நாட்டின் வளப்பம் சுற்றுச்சூழலைப்பொறுத்தே அமைகிறது. சுற்றுச்சூழலைப் பாதுகாக்க அரசாங்கமும்  தொடர்புடைய பிற இயக்கங்களும் முறையான நடவடிக்கைகள் எடுக்காவிட்டால் அடுத்த 10 முதல் 15 ஆண்டுகளில் நாட்டின் நீர்வளம் பெரும் பிரச்சினைகளை எதிர்நோக்கக்கூடும் என்று பெலிண்டுங் கசானா ஆலம் என்ற (பெக்கா) மலேசியா தெரிவித்திருக்கிறது.

இன்றைய நிலையில் நாட்டின் நீர்வளம் 60 களில் இருந்ததைப்போல் வளமாக இல்லை என்கிறார் அதன் தலைவர் புவான் ஸ்ரீ ஷெரீஃபா சப்ரினா சையட் அக்கில். இப்பிரச்சின விரைவாகத் தீர்க்கப்படா விட்டால் நிலைமை கடினமாகிவிடும்.

மரம் வெட்டுதல்  காடுகள் அழிப்பு போன்ற சுற்றுச்சூழல் பிரச்சினைகள், ஆறுகளை சேதப்படுத்துதல், மாசுபடுத்துதல் போன்றவைகளால்  நீர்வளங்கள் பெரும்பாதிப்பை நோக்கிச் செல்கின்றன.

அரசாங்கம் இதில் கூடுதல் கவனம் செலுத்த முற்படுவதோடு  வனவியல் சட்டத்தை கையாள்வதும் மிக அவசியம் என்பதை உணர்ந்து செயல்படவேண்டும்.

வனங்களை அகற்றும் நடவடிக்கைகள் கட்டுப்படுத்தப்படாவிட்டால் ஆற்று வளங்கள் சீரழிவை நோக்கித்தான் போகும். நீரோடைகளைப்  பாதிக்கும் போது, நீர் வளம் பயனற்றதாகிவிடும்.

நீரோடைகள் ஒரு நாட்டின் வளப்பத்திற்கும்  மக்களின் நீர்த்தேவைக்கும் இன்றியமையாதவை.

மலேசியாவில் நீர் மாசுபாடு, அதன் தாக்கங்கள் குறித்து ஷெரீஃபா சப்ரினா கருத்தரங்கொன்றில் உரை நிகழ்த்தினார்,  மேலகா எனும் பசுமை தொழில்நுட்பக் கழகத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டத்தோ டாக்டர் அபுபக்கர் முகமட் தியா இக்கருத்தரங்கை ஏற்பாடு செய்திருந்தார்.

எதிர்கால தலைமுறையினரின் நலனுக்காக காடுகள், ஆறுகளின் நீடித்த தன்மையை உறுதி செய்வதற்கான சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதும் கவனித்துக்கொள்வதும் அரசாங்கத்தின் முக்கிய செயலகளில் ஒன்றாக  இருக்க வேண்டும் என்று ஷெரீஃபா சப்ரினா வலியுறுத்திக் கூறினார்.

இதற்கும் மீட்பு நடைமுறையை (எஸ்ஓபி) பின்பற்ற வேண்டும் என்ற அவர், நீர், சுற்றுச்சூழல் துறையினர் நிலையான வடிவைப்பை உருவாக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தீவிரமாக நடவடிகையில் இறங்கவேண்டும் என்றார்.

மேலும் ஒப்புதல் அளிப்பதற்கு முன் சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீடு (EIA) அறிக்கையை மதிப்பாய்வு செய்யவேன்டும்.

நிலத்தடி நீரை பெரிய அளவில் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதகமான விளைவுகள் மண்ணின் படிவ  அடுக்குகளை உருவாக்கி, தீ விபத்துகளை அதிகரிக்கும், குறிப்பாக வறண்ட காலங்களில் நீர் மட்டம் குறைவதால் தீ ஏற்படும் அபாயம் அதிகம் இருக்கிறது என்றார் அவர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version