Home மலேசியா நெகிரி செம்பிலானில் டிங்கி அதிகரிப்பு – வீரப்பன் அறிவிப்பு

நெகிரி செம்பிலானில் டிங்கி அதிகரிப்பு – வீரப்பன் அறிவிப்பு

இவ்வாண்டு ஜனவரி தொடங்கி ஜூன் வரையில் நெகிரி செம்பிலான் மாநிலத்தில் டிங்கி காய்ச்சலின் பாதிப்பு 22 சதவீதம் உயர்ந்துள்ளது என மாநில சுகாதாரம், இயற்கைவளம், கூட்டறவு மற்றும் பயனீட்டாளர் விவகார நடவடிக்கைத் துறைத் தலைவர் வீரப்பன் சுப்பிரமணியம் கூறினார்.

இங்கு விஸ்மா நெகிரியில் செய்தியாளர்களுக்கு வழங்கிய தகவலின் போது மாநில அரசு ஆட்சிக்குழு உறுப்பினருமான அவர், ஜூன் மாத இறுதி இரண்டு வாரத்தில் 82 பேர் டிங்கி காய்ச்சலில் பதிக்கப்பட்டுள்ளது பதிவாகிவுள்ளது.

கடந்தாண்டு மொத்தம் 1228 பேர் பாதிக்கப்பட்டுள்ளதை ஒப்பிட்டு பார்க்கும் போது, இந்த ஆறு மாதத்தில் அந்த எண்ணிக்கை 1498 ஆக அதிகரித்துள்ளது அதிரச்சியளிக்கிறது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

மாவட்ட நிலையில் அப்பாதிப்பு எண்ணிக்கை விபரங்கள் சிரம்பான் – 1263, ரெம்பாவ் – 56, போர்ட்டிக்சன் – 55, ஜெம்புல் மற்றும் தம்பின் தலா- 43, கோலப்பிலா மற்றும் ஜெலுபு தலா – 19 என அவர் பட்டி்டியலிட்டு விளக்கமளித்தார். மேலும் இதுவரையில் டிங்கி் காய்ச்சலின் பாதிப்பால் அறுவர் இறந்துவிட்டதாக அவர் குறிப்பிட்டார்.

– நாகேந்திரன் வேலாயுதம்

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version