Home Hot News பிரதமர் வேட்பாளர் முஹிடினா? விளக்கம் தேவை

பிரதமர் வேட்பாளர் முஹிடினா? விளக்கம் தேவை

அடுத்த பொதுத் தேர்தலில் பிரதமர் வேட்பாளராக டான்ஸ்ரீ முஹிடினுக்கு அம்னோ ஆதரவு வழங்கியிருப்பது குறித்து அதன் தலைவர் டத்தோஸ்ரீ ஸாஹிட் ஹமிடி விளக்கமளிக்க வேண்டும் என்று தேசிய முன்னணியின் சபா மாநில தலைவர் புங் மொக்தார் ரடின் கேட்டுக் கொண்டார்.

சபா மாநில தலைவராக இருக்கும் தமக்கே தகவல் இன்னும் தெரிவிக்கப்படவில்லை. ஊடகங்கள் வாயிலாகவே தமக்கு இது தெரிய வந்ததாக அவர் கூறினார்.

அம்னோவின் எதிர்காலம் தொடர்பில் சபா தேசிய முன்னணி எப்போதுமே முழுமையாக பங்களிக்கும். எனவே விரைவில் தேசிய தலைவரை சந்தித்து முஹிடினுக்கு ஆதரவு தெரிவித்த விவகாரம் தொடர்பில் விளக்கம் பெறப் போவதாக புங் மொக்தார் கூறினார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version