Home மலேசியா மூத்த குடிமக்கள்

மூத்த குடிமக்கள்

மூத்த குடிமக்கள் கொரோனா தொடர்பில் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பது நியாயமானதுதாதன். 70 வயதை எட்டியவர்கள் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும் என்பதில் அரசாங்கம் மிகுந்த அக்கறைக் கொண்டிருக்கிறது என்பது மக்கள் மீது கொண்டுள்ள மினிதாபிமானத்தைக்காட்டுகிறது.

இதனால், மூத்த குடிமக்கள் சில இடங்களில் அனுமதிக்கப்படுவதில்லை. சோதனை செய்கின்றவர்களுக்கு இடப்பட்ட ஆணையின் கீழ் அவர்கள் செயல்படுகின்றனர். அவர்களைக் குறை கூறுவதும் பொருத்தமானதல்ல.

ஆனால், இதிலும் ஒரு ஒரு பிரச்சினை எழுந்துள்ளது. 70 வயதான ஒருவர் மார்க்கெட்  ஒன்றுக்குச் சென்றபோது வயதின் காரணமாக உள்ளே அனுமதிக்கப்படவில்லை. துணைக்காக அவர் யாரையும் அழைத்துவரவில்லை என்பதைவிட, அவருக்குத் துணையாக யாரும் இல்லை என்பதுதான் உண்மை. அவர் தனிக்கட்டை.

அவருக்குத்தேவையான பொருட்களை அவர்தான் வாங்கிக்கொள்ள வேண்டும். அவருக்கான தேவைகளுக்கு அவரே பொறுப்பானவர் என்றிருக்கும்போது, அவரை உள்ளே அனுமதிக்கவில்லையென்றால் அவரின் உணவுக்கு என்ன வழி?

கோவிட் காலம் இன்னும் முற்றுப்பெறவில்லை. சில 70 வயது மனிதர்கள் இன்னும் திடகாத்திரமாகவே இருக்கிறார்கள் என்பதையும் கவனத்தில் கொள்வது நல்லது. இப்பிரச்சினைகள் குறித்தும் பரிசீலிக்கலாமே!

Previous articleமுன்னணி பணியாளர்களுக்கு நன்றி கூறும் புனித பயணம்
Next articleமக்களே பதில் கூறத்தக்கவர்கள்!

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version