Home இந்தியா பப்ஜிக்கு 16 லட்சம் செலவு செய்த சிறுவன்

பப்ஜிக்கு 16 லட்சம் செலவு செய்த சிறுவன்

இந்தியாவில் பப்ஜி கேம்மிற்கு அதிகம் பேர் அடிமையாகியுள்ளனர் என்ற செய்தி நாம் அனைவரும் அறிந்ததே. பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த 17 வயது சிறுவன் பப்ஜி கேமிற்காக ரூ. 16 லட்சம் செலவு செய்த அதிர்ச்சி தகவல் இப்போது வெளியாகியுள்ளது. படிப்பிற்காகப் பணம் வேண்டும் என குடும்பத்தாரை நம்ப வைத்து, வங்கிக் கணக்குகளின் விவரங்களைப் பெற்று இந்த செலவுகளைச் சிறுவன் செய்து வந்துள்ளார். பஞ்சாப், அரசு அதிகாரி ஒருவரின் 17 வயது மகன் பப்ஜிக்கு அடிமையாகியுள்ளார். பல மணி நேரம் இடைவிடாமல் இந்த சிறுவன் மொபையில் போன் பயன்படுத்துவதைப் பெற்றோர் கண்டித்துள்ளனர். அதற்குச் சிறுவன் அவர்களிடம், தான் பாடம் கற்றுக் கொள்ள மொபையிலை பயன்படுத்துகிறேன் எனக் கூறி பெற்றோரை நம்ப வைத்துள்ளார்.

மேலும் சில பாடங்களைக் கற்கப் பணம் கேட்கிறார்கள் எனப் பெற்றோரிடம் கூறி வங்கி விவரங்களையும் பெற்றுள்ளார். அந்த வங்கி விவரங்களைக் கொண்டு பப்ஜியில் பணம் செலுத்துவது, பப்ஜி கேம் தொடர்பாக உள்ள வேறு சில ஆப்களை பணம் கட்டி தரவிறக்கம் செய்வது எனப் பணத்தைச் செலவு செய்து வந்துள்ளார்.

சமயங்களில் தனது நண்பர்களுக்கும் இவர் பணம் கட்டி பப்ஜியில் சில சலுகைகளை பெற்று தந்தது தெரியவந்தது. இந்த விவகாரம் குறித்துப் பெற்றோருக்கு எந்த தகவலும் தெரியாமலே இருந்துள்ளது.

இதற்கிடையே வீட்டில் சந்தேகம் வராமலிருக்க இந்த சிறுவன் ஒரு வங்கிக் கணக்கிலிருந்து மற்றொரு வங்கிக் கணக்கிற்கு அவ்வப்போது பணத்தை மாற்றி வைப்பதையும் வாடிக்கையாகச் செய்து வந்துள்ளார்.

உயிரிழந்த டாக்டர் குடும்பத்திற்கு ஒரு கோடி வழங்கிய முதல்வர்!

இந்நிலையில் சமீபத்தில் பெற்றோர் அனைத்து வங்கிக் கணக்குகளின் தரவுகளைச் சரிபார்த்தபோது அதிர்ச்சியடைந்தனர். அதில், தங்கள் மகன் சுமார் ரூ. 16 லட்சத்தை பப்ஜிக்காக செலவழித்துள்ளது தெரியவந்தது. அந்த சிறுவனிடம் இதுகுறித்து பெற்றோர் விசாரித்தபோது, வங்கியிலிருந்து வரும் மெஸஜ்களை அழித்து வந்துள்ளதையும் ஒப்புக் கொண்டுள்ளார்.

பப்ஜி கேம் விளையாடும் நபர்களுக்கு நேரக் கட்டுப்பாட்டுக் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இரண்டு மணி நேரத்தில் முதல் எச்சரிக்கையை பப்ஜி கேம் சம்பந்தப்பட்ட பயனாளருக்கு அளிக்கும். அதேபோல் தொடர்ந்து ஒரே நாளில் 8 மணி நேரம் விளையாடினால், அவர்களை உள்ளே நுழைய பப்ஜி அனுமதிக்காது.

இந்த நடவடிக்கைகளை பப்ஜி எடுத்து வந்தாலும், பெரும்பாலானவர்கள் பல கணக்குகளை வைத்துக் கொண்டு தொடர்ந்து விளையாடிக் கொண்டேதான் இருக்கிறார்கள்.

Previous articleமாணவர்களிடம் தவறாக நடந்து கொள்ள முயற்சித்த தோட்டக்கரார் கைது
Next articleஈராக்கில் உள்ள அமெரிக்க தூதரகம் மீது நடத்தப்பட்ட ராக்கெட் தாக்குதல் முறியடிப்பு

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version