Home உலகம் பாரிஸ் அருங்காட்சியகம் நிபந்தனையுடன் திறப்பு

பாரிஸ் அருங்காட்சியகம் நிபந்தனையுடன் திறப்பு

உலகில் அதிகம் பார்வையிடப்பட்ட அருங்காட்சியகம் பாரிஸில் உள்ளது. மோனாலிசாவின் இல்லமான இதில் உள்ள லூவ்ரே  மீண்டும் திறக்கப்படுகிறது, ஆனால், கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகளால்  வளாகத்தின்  சில பகுதிகள் பார்வையாளர்களுக்கு மூடப்பட்டுள்ளன.

மார்ச் 13 முதல் லூவ்ரே மூடப்பட்டுள்ளது. இது ஏற்கனவே 40 மில்லியன் யூரோக்களுக்கு மேல் இழப்புக்கு வழிவகுத்திருக்கிறது  என்று அதன் இயக்குநர் ஜீன் லூக் மார்டினெஸ் கூறினார்.

2018 ஆம் ஆண்டில் 10 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களில், கிட்டத்தட்ட

பொது மக்களில் 80 சதவீதத்தை இழந்துவிட்டதாகவும்,  எழுபத்தைந்து சதவீதம் பேர் வெளிநாட்டினர் என்றும் மார்டினெஸ் கூறியிருக்கிறார்.

கடந்த கோடைக்காலத்தில் பதிவு செய்யப்பட்ட  எண்ணிக்கையில், 20 முதல் 30 சதவிகிதம் வரை 4,000 முதல் 10,000 பார்வையாளர்கள் வரை வருகை புரிந்தனர்

பார்வையாளர்கள் முகமூடிகளை அணிய வேண்டும், தின்பண்டங்கள் அல்லது ஆடை அறைகள் கிடைக்காது, பொதுமக்கள் அருங்காட்சியகம் வழியாக வழிகாட்டும் பாதையை பின்பற்ற வேண்டும் என்று மோனாலிசாவுக்கு முன்னால் குறிப்புகள் வைக்கப்படிருக்கின்றன – சுற்றுலாப் பயணிகள் வழக்கமாக  செல்ஃபிக்களுக்குப்  போஸ் கொடுக்க – சமூக தூரத்தை உறுதி செய்யவேண்டும் என்றும் குறிப்பில் காட்டப்பட்டிருக்கின்றன.

ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் பிரான்ஸ் 100 மில்லியன் யூரோக்களை (112 மில்லியன் டாலர்) அருங்காட்சியகத்திற்குப் பங்களிக்கிறது, மேலும் மீதமுள்ளவற்றை இந்த அருங்காட்சியகமே ஏற்க வேண்டும் என்றும்  நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

அருங்காட்சியகத்தின் எழுபது சதவிகிதம் – அல்லது 45,000 சதுர மீட்டர் (சுமார் 485,000 சதுர அடி) – பொதுமக்களுக்காகத் திறந்திருக்கும்.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் மூடப்பட்ட அதன் பிளாக்பஸ்டர் லியோனார்டோ கண்காட்சியின் வெற்றிக்குப் பிறகு, லூவ்ரே அதன் இரண்டு கண்காட்சிகளை வசந்த காலத்திற்காகத் திட்டமிட்டது.  பின்னர் ஒத்திவைத்தது. இப்போது,  இலையுதிர்காலத்தில் நடைபெறும் என்றும் கூறியிருக்கிறது.

தொற்றின் காலத்தில் லூவ்ரே அதன் கையிருப்பை உயர்த்தியுள்ளது.  மேலும்  இப்போது இன்ஸ்டாகிராமில்,  நான்கு மில்லியனுக்கும் அதிகமான பின்தொடர்பவர்களைக் கொண்ட உலகில், அதிகம் பின்பற்றப்பட்ட அருங்காட்சியகமாக இது விளங்குகிறது.

பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளை 2024 இல் நடத்தும். அதற்கு முன்னதாக மார்டினெஸ் அருங்காட்சியகம் புதுப்பிக்கப்படும் என்றும் தெரிவித்திருக்கின்றனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version