Home வணிகம் உயிர் காக்கும் சேவையில் ஸ்குவாட்ஸ்- தேசிய ரத்த வங்கி- ஏஇயோன்

உயிர் காக்கும் சேவையில் ஸ்குவாட்ஸ்- தேசிய ரத்த வங்கி- ஏஇயோன்

உயிர் காக்கும் சேவையில் ஸ்குவாட்ஸ், தேசிய ரத்த வங்கி மற்றும் ஏஇயோன் முத்தரப்பு பங்களிப்பு அளப்பரியது.
பலாக்கோங், செராஸ் செலாத்தான் ஏஇயோன் (AEON) பேரங்காடி ஆதரவோடு (ஸ்குவாட்ஸ்) மலேசிய ஸ்ரீ குழந்தை வடிவேலன் திருப்பணி சபா ஏற்பாட்டில் தேசிய ரத்த வங்கி ஒத்துழைப்புடன் 14ஆவது முறையாக மனிதநேய ரத்ததானம் முகாம் நடைபெற்றது.

இன்றையத் தலைமுறையினர் மத்தியில் பொதுநலப் பண்புகளை உணர்த்தும் சமுதாயப் பணிகளைத் தன்னார்வ முறையில் தொடர்ந்து செய்து வருவதாக அதன் தலைவர் இரா. பிரேமக்கண்ணன் தெரிவித்தார்.

கொரோனா நடமாட்டக் கட்டுப்பாட்டு காலத்தில் ரத்த வங்கியில் ரத்தப் பற்றாக்குறையை ஈடு செய்ய உதவும் வகையில் இம்முகாம் ஏற்பாடு செய்யப்பட்டது.

காஜாங் மாவட்ட காவல் நிலைய குற்றவியல் தடுப்பு மற்றும் சமூக நலப் பிரிவு அதிகாரி ஏஎஸ்பி வி. ராமன், பாங்கி நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினர் டாக்டர் ஓங் கியான் மிங், பலாக்கோங் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் ஓங் சியூ கீ, காஜாங் நகராண்மைக் கழக உறுப்பினர்கள், தேசிய ரத்த வங்கி மருத்துவர்கள் ஃப்ராஹின், சைஃபா, AEON செராஸ் செலாத்தான் பேரங்காடி நிர்வாகிகள் நளினி மற்றும் ஸரோனி கலந்து கொண்டனர்.

இம்முகாமில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் உட்பட பிடிஎன் பணியாளர்கள், ஸ்குவாட்ஸ் தன்னார்வலர்கள் ஒன்றிணைந்து தன்னலம் பாராமல் பங்கேற்றனர்.

எம். அன்பா

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version