Home இந்தியா தந்தை மருத்துவ செலவுக்கான 16 லட்சம் ரூபாயை பப்ஜி மொபைலில் செலவிட்ட இளைஞர்

தந்தை மருத்துவ செலவுக்கான 16 லட்சம் ரூபாயை பப்ஜி மொபைலில் செலவிட்ட இளைஞர்

முன்னதாக பலமணி நேரங்கள் தொடர்ச்சியாக பப்ஜி மொபைல் கேம் விளையாடியதால் பலர் உயிரிழந்த சம்பவங்கள் நடைபெற்று இருக்கிறது. அந்த வரிசையில் பப்ஜி மொபைல் கேமிற்கு எதிராக மற்றொரு சம்பவம் பஞ்சாபில் அரங்கேறி இருக்கிறது.
அதன்படி பஞ்சாபை சேர்ந்த இளைஞர் ஒருவர் தனது பெற்றோர் வங்கி கணக்கில் இருந்த ரூ. 17 லட்சம் தொகையை இன்-ஆப் பர்சேஸ்களுக்கு செலவிட்டுள்ளார். பஞ்சாபின் கரார் பகுதியை சேர்ந்த 17 வயதான இளைஞர் தனது தந்தையின் மருத்துவ செலவிற்கு சேமிக்கப்பட்ட தொகையை பப்ஜி மொபைலில் செலவிட்டுள்ளார்.
இளைஞர் தனது பப்ஜி மொபைல் அக்கவுண்ட்டினை அப்கிரேடு செய்ய மூன்று வங்கி கணக்குகளை பயன்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. தனக்கு மட்டுமின்றி தனது குழுவினருக்கும் இவர் பப்ஜி மொபைலில் செலவு செய்திருக்கிறார். வங்கி செலவீன அறிக்கைகளை பார்த்து, குடும்பத்தார் இந்த விவரங்களை அறிந்துள்ளனர்.
 பப்ஜி மொபைல் கேமில் ரூ. 17 செலவிட்ட இளைஞரின் தந்தை அரசாங்க ஊழியர் என்பதும் அவர் உடல்நல குறைவு காரணமாக தொடர் சிகிச்சை பெற்று வருவதும் தெரியவந்துள்ளது. மேலும் இந்த தொகை தந்தையின் மருத்துவ செலவிற்காக சேமிக்கப்பட்ட தொகை என்றும் தெரிகிறது.
ஏற்கனவே வெளியான தகவல்களின் படி பப்ஜி மொபைல் மூலம் டென்சென்ட் நிறுவனம் மே மாதத்தில் மட்டும் ரூ. 1668 கோடிகளை வருவாயாக ஈட்டி இருப்பதாக சென்சார் டவர் எனும் ஆய்வு நிறுவனம் தெரிவித்து இருந்தது.  மேலும் ஆண்டின் முதல் அரையாண்டு காலக்கட்டத்திலேயே டென்சென்ட் நிறுவனம் அதிக வருவாய் ஈட்டி உள்ளதாகவும், இதுவரை பப்ஜி மொபைல் கேம் மட்டும் சுமார் 22 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் ஈட்டி இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version