Home மலேசியா பகாங் மாநில மஇகா இளைஞர் பிரிவு அதிரடி நடவடிக்கை

பகாங் மாநில மஇகா இளைஞர் பிரிவு அதிரடி நடவடிக்கை

மெந்தகாப்,

மக்கள் ஓசை முகநூலில் வைரல் ஆன மெந்தகாப் இரயில் தண்டவாள புறம்போக்கு நிலத்தில் போதுமான சுகாதார வசதிகள் மற்றும் எந்த ஒரு ஆவணங்களும் இல்லாமல் கடந்த 30௦ ஆண்டு காலமாக பரிதவிக்கும் 4 இந்திய குடும்பங்கள் எனும் செய்தியை தொடர்ந்து பகாங் மாநில மஇகா இளைஞர் பிரிவு மற்றும் தெமெர்லோ தொகுதி மஇகாவுடன் அதிரடியாக களமிறங்கியது.

இந்த செய்தியை கேள்வி பட்டவுடன் மாநில இளைஞர் பிரிவின் தலைவர் கார்த்திக் முருகையா அவருடன் தொகுதி மஇகா தலைவர் நா. சுப்பிரமணியம் அவருடன் மெந்தகாப் குழுவக தமிழ் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் தலைவர் செல்வநாயகம் , கோலாக்கிராவ் தொகுதி தலைவர் டத்தோ ம.முருகையா , பாதிக்கப்பட்ட குடும்ப உறுப்பினர்களின் பிரச்சினைகளை கண்டறிந்தனர்.

சுமார் இரண்டு மணி நேரம் கலந்துரையாடலுக்குப் பிறகு அவர்கள் இந்த நாட்டில் பிறந்தற்க்கான சில தரவுகள் (பத்திரங்கள்) பெற்று கொண்டனர். அந்த குடும்பத்தைச் சேர்ந்த அனைவரும் மெந்தகாப் வட்டாரத்தில் பிறந்தவர்கள் ஆவர். அந்த குடும்ப உறுப்பினர்களின் கவனக் குறைவாலும் மற்றும் வசதியின்மை காரணமாக குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பிறப்பு பத்திர ஆவணங்களை எடுக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்று மு. கார்த்திக் கூறினார்.

தொடர்ந்து பாதிக்கப்பட்ட அந்த குடும்ப உறுப்பினர்களுக்கு முறையான ஆவணங்களை பெற்றுத் தருவதற்கு பகாங் மாநில இளைஞர் பிரிவு முழு முயற்சியை மேற்கொள்ளும் என்று உறுதியளித்தார். அதன் தொடர்பாக தாம் இப்பிரச்சனையை மஇகாவின் தேசிய தலைவர் டான் ஸ்ரீ விக்னேஸ்வரன் , துணைத் தலைவர் டத்தோ சரவணன் மஇகா இளைஞர் பகுதி தலைவர் தினாளன் மற்றும் பகாங் மாநில மஇகா தலைவர் வீ .ஆறுமுகம் ஆகியவரின் கவனத்திற்கு எடுத்து செல்வேன் என்று மக்கள் ஓசையிடம் தெரிவித்தார்.

பி. ராமமூர்த்தி

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version