Home மலேசியா அமர்வு நீதிமன்றத்தில் பண மோசடி குற்றப்பதிவு

அமர்வு நீதிமன்றத்தில் பண மோசடி குற்றப்பதிவு

ஒரு நிறுவனத்தின் இயக்குநர் மீது அமர்வு நீதிமன்றத்தில் பண மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது, இது 9 மில்லியன் வெள்ளி தொடர்பிலானது.

செமனி ஜெயா எஸ்.டி.என். பி.டி.யின் இயக்குநரான லா கோக் லூன்,( 77 வயது) , நீதிபதி ஹஸ்புல்லா ஆடாம் முன்பாக  அறிக்கை  வாசிக்கப்பட்ட பின்னர் இந்தக் குற்றச்சாட்டுக்கு குற்றவாளி  அல்ல என்று கூறினார்.

சட்டவிரோத செயல்களிலிருந்து கிடைத்த வருமானம் என்று நம்பப்படும் 9,155,644.23 வெள்ளி சம்பந்தப்பட்ட பணத்தை, ஹோங் லியோங் வங்கியில் அவருக்குச் சொந்தமான ஒரு நிலையான கணக்கிலிருந்து 34 பரிவர்த்தனைகளில், அவருக்கு சொந்தமான நடப்புக் கணக்கிற்கு மாற்றுவதன் மூலம் அவர் இந்தக் குற்றத்தைச் செய்ததாகக் கூறப்படுகிறது

ஹோங் லியோங்கில் உள்ள ஹோங் லியோங் வங்கியின் கோலாலம்பூர் பிரதான கிளையில் இப்பறிமாற்றம்  நடந்ததாகக் கூறப்படுகிறது.

லாவுக்கு 30,000 வெள்ளியில் ஒருநபர் ஜாமீன் வழங்கப்பட்டது, மேலும் அவரது பாஸ்போர்ட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்கவும் உத்தரவிடப்பட்டது.

நீதிமன்றம் ஜூலை 20 இல் விசாரணைக்குக் குறிப்பிட்டுள்ளது.

துணை அரசு வக்கீல் சியாபினாஸ் ஷாபுடின் வழக்கு தொடர்ந்தார், லாவை வழக்கறிஞர் எஸ்.எஸ்.தேவானந்தன் பிரதிநிதித்திருக்கிறார்.

 

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version