Home மலேசியா டிஏபி ரஹாங் சட்டமன்ற உள்ளிட்ட அடிப்படை உறுப்பினர் பதவியிலிந்து விலகல்

டிஏபி ரஹாங் சட்டமன்ற உள்ளிட்ட அடிப்படை உறுப்பினர் பதவியிலிந்து விலகல்

சிரம்பான்:  டிஏபி ரஹாங் சட்டமன்ற உறுப்பினர் மேரி ஜோசபின் பிரிட்டம் சிங் கட்சியில் இருந்து விலகுவதற்கான தனது முடிவை அறிவித்துள்ளார், ஆனால்  தான் பக்காத்தான் சார்பு ஹாரப்பனுக்கு இணைந்திருப்பேன் என்று தெரிவித்தார். 1974 ஆம் ஆண்டு முதல் கட்சியில் இணைந்த இவருக்கு தற்பொழுது வயது 71.  இவர் கட்சியின் ஆயுட்கால உறுப்பினர் மற்றும்  ரஹாங் சட்டமன்ற உறுப்பினருமாவார்.  தனது  பதவி விலகல் எடுத்த முடிவு திடீரென எடுத்ததல்ல என்றார்.

இனி சவால்களை எதிர்கொள்ள முடியாது என்பதால் இந்த முடிவினை எடுத்தேன் என்றார். ஒருமைப்பாடு  மற்றும் கட்சி பிம்பத்தை நிலைநிறுத்துவதில், கடந்த 46 ஆண்டுகளில் டிஏபி உறுப்பினராக எனக்குள் ஊக்குவிக்கப்பட்ட கொள்கைகள் மற்றும் ஒழுக்கங்களின் வழிகாட்டுதல்களைக் கடைப்பிடிப்பதில் நான் சவால்களை எதிர்கொள்கிறேன். நெகிரி செம்பிலானில் டிஏபி உறுப்பினர்கள் மற்றும் தலைவர்கள் பணியாற்றுவதும் ஆதரிப்பதும் மிகப் பெரிய ஏமாற்றமாகிவிட்டது என்றார். டிஏபி ஆயுட்கால உறுப்பினர்  உள்ளிட்ட  அனைத்து கட்சி பதவிகளிலிருந்தும் நான் ராஜினாமா செய்வதைத் தவிர வேறு வழியில்லை அவரது சேவை மையத்தில் வெள்ளிக்கிழமை (ஜூலை 10) நிருபர்கள் மத்தியில் அவர் கூறினார்.

டிஏபி மகளிர்  தேசிய அமைப்பு செயலாளர், பக்காத்தான் ஹாரப்பனின் தேசிய துணைத் தலைவர் மற்றும் டிஏபியின் மாநில மகளிர் தலைவர் பதவி உள்ளிட்ட அனைத்து பதவிகளிலிருந்தும் விலகுவதாக ஜோசபின் கூறினார். நான் விலகுவதற்கான எனது முடிவு இன்று அல்லது நேற்று நடந்த ஒன்று அல்ல. 2018 முதல் நடந்து கொண்டிருக்கும் ஒன்று என்பதை உங்களுக்குத் தெரியப்படுத்த விரும்புகிறேன். நான் ஏளனம் செய்யப்பட்டேன், கிசுகிசுக்கப்பட்டேன். ஆனால் அது எனக்கு ஒரு பொருட்டல்ல  என்று அவர் கூறினார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version