Home ஆன்மிகம் எல்லா நலன்களையும் அளிக்கும் காயத்ரி மஹா மந்திரம்

எல்லா நலன்களையும் அளிக்கும் காயத்ரி மஹா மந்திரம்

ஓம் பூர் புவஸ் ஸூவஹ
ஓம் தத் சவிதுர் வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீ மஹி
தியோயோன: பிரசோதயாத்


காயத்ரி மந்திரத்தை பக்தி சிரத்தையுடன் யார் ஜெபிகின்றார்களோ அவர்களை இந்த மந்திரம் ரட்சிக்கும், பாதுகாக்கும் அத்துடன் அவர்களுக்கு எல்லா நலன்களையும் அளிக்கும். வேத மந்திரங்களுக்கெல்லாம் தாயாக விளங்கும் காயத்ரி மந்திரம் 24 அட்சரங்களைக் கொண்டது. ஒவ்வொன்றும் எட்டு எழுத்துகள் கொண்ட 3 பாதங்கள் உள்ளன. ஒவ்வொறு பாதமும் ஒவ்வொரு வேதத்தின் சாரம். ரிக், யஜுர், சாமம் என்ற மூன்று வேதங்களின் சாரமே காயத்ரி மந்திரம். காயத்ரி மந்திரத்திற்கு ஒப்பான மந்திரம் வேறு எதுவும் இல்லை.

காயத்ரி மாத்திரம் சூரிய பகவானை நோக்கி சொல்லப்படும் மந்திரம். இந்த மந்திரத்தை ஐந்து பாகங்களாக பிரித்து ஜபிப்பது உத்தமம். பிரணவம், வ்யாஹ்ருதி மற்றும் காயத்ரி மந்திரத்தின் மூன்று பாகங்கள், ஆக ஐந்து பாகங்களாக பிரித்து ஜபிக்க வேண்டும். வாழ்கையில் அணைத்து வளங்களையும் அளித்து நம்மை பாதுகாக்கும் இம் மஹா மந்திரம் கோடிகணக்கான மக்களால் ஜபிக்கப்பட்டு வருகின்றது. பெரியவர்கள் முதல் சிறியவர் வரை இந்த மஹா மந்திரத்தை குரு மூலமாக உபதேசசம் பெற்று தினமும் காலையும், மாலையும் ஜபித்து வர வாழ்கையில் அனைத்து துன்பங்களும் விலகி நல்ல தேக ஆரோக்கியம் கிட்டும்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version