Home மலேசியா குடிபோதையில் வாகனம் ஓட்டினால் என்ன தண்டனை?

குடிபோதையில் வாகனம் ஓட்டினால் என்ன தண்டனை?

மதுச்சாரம், போதைப்பொருளின்  பயன்பாட்டுக்குப்பின்  குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்கள் பிரச்சினை  நாடாளுமன்றத்தில் தொடரில் வைக்கப்படும்.

நாடாளுமன்ற இணையத்தளத்தில், கூட்டத்தின் நிகழ்ச்சி நிரலின் படி, டத்தோஶ்ரீ டாக்டர் ஷாஹிடான் காசிம் (பி.என்-அராவ்) வாய்வழி கேள்வி பதில் அமர்வில் இவ்விவகாரம் தொட்டு கேள்வியை முன் வைப்பார்.

மரணத்திற்கு காரணமான குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களுக்கு மரண தண்டனையை அறிமுகப்படுத்துவதற்கான சாத்தியத்தையும் இந்த கேள்வி அமைந்திருக்கும்.

கோவிட் -19 இன் தாக்கத்தால் சுற்றுலாத் துறையால் இழந்த வருவாயின் அளவு குறித்து சுற்றுலா, கலை, கலாச்சார அமைச்சருக்கான டத்தோ அஹ்மட் நஸ்லான் இட்ரிஸ் (பி.என்-ஜெரண்டட்)  இது குறித்தும் கேள்வியை முன் வைப்பார்.

கோவிட் -19 தொற்றுநோயால் மோசமாகப் பாதிக்கப்பட்ட பின்னர் மலேசியாவை மீண்டும் சுற்றுலாத் தளமாக மாற்றும் சுற்றுலா, கலை, கலாச்சார அமைச்சகத்தின் திட்டங்களை அறிய விரும்பும் அப்துல் லத்தீப் அப்துல் ரஹ்மான் (பிஏஎஸ்-கோலா கிராய்)  சுற்றுலா குறித்த கேள்வியை எழுப்புவார்.

இதற்கிடையில், வீடற்ற மக்கள் , இயக்கக் கட்டுப்பாட்டு ஆணை காலத்தில் சண்டையிடுவோரின் பிரச்சினையை சமாளிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து பெண்கள், குடும்பம் , சமூக மேம்பாட்டு அமைச்சகம் தெரிவிக்க வேண்டும் என்று வான் ஹசான் மொஹமட் ராம்லி (பிஏஎஸ்-டுங்குன்) எழுப்பிய கேள்விக்கான பதிலை எதிர்பார்ரக்கிறார்.

இந்த முறை நாடாளுமன்றம் ஆகஸ்ட் 27 வரை 25 நாட்கள் நடைபெறும், புதிய இயல்புக்கு ஏற்ப கோவிட் -19 பரவுவதைத் தடுப்பதற்கான நிலையான இயக்க முறைமையைக் கடைப்பிடிக்கவும் நாடாளுமன்ற அமர்கள் அமைந்திருக்கும்.

முகக்கவசம், கை துப்புரவுப் பொருள்களைப் பயன்படுத்துவது, அத்துடன் அமர்வு கட்டுப்பாட்டு ஆணையில் சிறப்பு அமைச்சரவைக் கூட்டம் தீர்மானித்தபடி அமர்வுகளின் போது நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஒரு மீட்டர் இருக்கை இடைவெளி இருப்பதை உறுதிசெய்வதும் இதில் அடங்கும்

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version