Home இந்தியா 30 வினாடிகளில் கொரோனாவை கண்டறியும் கருவியை இணைந்து உருவாக்க இந்தியா வருகிறது இஸ்ரேல் குழு

30 வினாடிகளில் கொரோனாவை கண்டறியும் கருவியை இணைந்து உருவாக்க இந்தியா வருகிறது இஸ்ரேல் குழு

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றை கண்டுபிடிக்க இந்தியாவில் ‘ஆர்டிபிசிஆர்’ பரிசோதனை முறை பின்பற்றப்படுகிறது. இந்த பரிசோதனையில் முடிவு வர சில மணி நேரம் தேவைப்படுகிறது.

இந்த நிலையில் 30 வினாடிகளில் கொரோனாவை கண்டறியும் அதிவிரைவு கருவி ஒன்றை இந்தியாவும், இஸ்ரேலும் இணைந்து கூட்டாக உருவாக்க உள்ளது.

இதற்கான ஆராய்ச்சியில் இந்தியாவின் ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பான டி.ஆர்.டி.ஓ.வுடன் இணைந்து இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சகத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் குழு ஈடுபட்டுள்ளது.

இது தொடர்பாக இஸ்ரேல் தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

அடுத்து வரும் வாரங்களில், இஸ்ரேல் அரசின் வெளியுறவுத்துறை, பாதுகாப்புத்துறை மற்றும் சுகாதாரத்துறை அமைச்சகங்கள் இந்தியாவுடன் இணைந்து கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட உள்ளது.

இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சகத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் குழுவினர் சிறப்பு விமானத்தில் டெல்லி செல்ல உள்ளனர். அங்கு அவர்கள் இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சிஅமைப்பு மற்றும் மூத்த விஞ்ஞானி கே.விஜய்ராகவன் குழுவுடன் இணைந்து 30 வினாடிகளில் கொரோனாவை
கண்டறியும் அதிவிரைவு பரிசோதனைக்கருவியை உருவாக்கும் பணிகளை மேற்கோள்வார்கள்.

இந்த விமானத்தில் கொரோனா எதிர்கொள்ள பயன்படுத்தப்பட்டு வரும் இஸ்ரேலிய தொழில்நுட்பமும் கொண்டுவரப்படுகிறது.

இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்வதற்கென இஸ்ரேல் அரசால் சிறப்பு அனுமதி வழங்கப்பட்டுள்ள வெண்டிலேட்டர்களும் இந்த விமானத்தில்
கொண்டுவரப்பட உள்ளன.

Previous articleவனிதாவிற்கு கொலை மிரட்டல் விடுத்ததாக சூர்யா தேவி கைது
Next articleவிசாரணைக்கு அழைத்து சென்ற விவசாயி திடீர் மரணம்- போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்ட உறவினர்கள்

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version