Home மலேசியா என் தந்தையின் கைது தீய அரசியல் நோக்கம் கொண்டது: லிம்மின் புதல்வர் சாடல்

என் தந்தையின் கைது தீய அரசியல் நோக்கம் கொண்டது: லிம்மின் புதல்வர் சாடல்

பெட்டாலிங் ஜெயா: மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்.ஏ.சி.சி) தனது தந்தையை கைது செய்தது எதிர்பாராதது அல்ல என்றும்  இது  தீய நோக்க அரசியல் என்றும் முன்னாள் நிதி மந்திரி லிம் குவான் எங்கின் மகன்  கூறுகிறார். பக்காத்தான் ஹராப்பன் அரசாங்கத்தின் வீழ்ச்சியிலிருந்து இந்த திட்டம் டிஏபியை அகற்றுவதாகும். இறுதியில் பக்காத்தான் ஹராபனை அழிக்கும்” என்று மார்கஸ் லிம் கூறினார். உண்மையைச் சொல்வதானால், பக்காத்தான் ஹராப்பன் அரசாங்கத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர் இந்த நாள் வரும் என்று நாங்கள் எதிர்பார்த்தோம்.

அவர்களின் திட்டம் எளிதானது, அவர்களின் மோசமான திட்டத்திற்கு தலைவணங்காத தலைவர்களை  போலியான குற்றச்சாட்டினை பதிவு செய்வதாகும். அவர்களின் தீய நோக்க அரசியலை தவறான முறையில் பயன்படுத்துகிறார்கள். துரதிர்ஷ்டவசமாக, இங்கு அரசியல் செயல்படுகிறது. கவலைப்பட வேண்டாம், நாங்கள் நிச்சயமாக மீண்டும் போராடுவோம் என்று அவர் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 6) பிற்பகுதியில் பேஸ்புக்கில் பதிவிட்டார்.

630 கோடி வெள்ளி பினாங்கு கடலுக்கடி சுரங்கப்பாதை திட்டம் தொடர்பாக லஞ்சம் கோரியதாக குற்றம் சாட்டப்பட்டபோது லிம் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 7) குற்றவாளி அல்ல என்று மறுத்தார். டிஏபி பொதுச்செயலாளரும் பினாங்கு முன்னாள் முதலமைச்சருமான (2008-2018) இந்த திட்டத்திற்கான ஒப்பந்தத்தைப் பெறுவதற்காக டத்தோ ஸாருல் அஹ்மத் சுல்கிஃப்லியிடமிருந்து 10 விழுக்காட்டு  லாபத்தை லஞ்சமாக கோரியதாக குற்றம் சாட்டப்பட்டது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version