Home உலகம் அமெரிக்காவில் மட்டும் ஒரே நாளில் 63 ஆயிரம் பேருக்கு புதிதாக கொரோனா

அமெரிக்காவில் மட்டும் ஒரே நாளில் 63 ஆயிரம் பேருக்கு புதிதாக கொரோனா

இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். ஆனாலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை 1 கோடியே 95 லட்சத்து 24 ஆயிரமாக அதிகரித்துள்ளது.
குறிப்பாக அமெரிக்காவில் மட்டும் நேற்று ஒரே நாளில் 63 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் 1 கோடியே 95 லட்சத்து 24 ஆயிரத்து 66 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 62 லட்சத்து 67 ஆயிரத்து 252 பேர் சிகிச்சை பெற்று வருகிறனர். சிகிச்சை பெறுபவர்களில் 65 ஆயிரத்து 98 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.  வைரஸ் பாதிப்பில் இருந்து 1 கோடியே 20 லட்சத்துக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். ஆனாலும், கொரோனாவால் இதுவரை 7 லட்சம் 20 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா அதிகம் பரவிய நாடுகள்:-
அமெரிக்கா – 50,95,524
பிரேசில் – 29,67,064
இந்தியா – 20,27,074
ரஷியா – 8,77,135
தென் ஆப்பிரிக்கா – 5,45,476
மெக்சிகோ – 4,62,690
பெரு – 4,55,409
சிலி – 3,68,825
கொலம்பியா – 3,68,825
ஸ்பெயின் – 3,61,442
Previous articlePihak berkuasa Macau diminta jangan ambil mudah isu Jho Low: KPN
Next articleபெர்சத்து கட்சியை விட்டு வெளியேறினார் ஜெராம் சட்டமன்ற உறுப்பினர்

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version