Home இந்தியா பெண்களின் குறைந்தபட்ச திருமண வயதை மறுபரீசிலனை செய்ய குழு அமைப்பு

பெண்களின் குறைந்தபட்ச திருமண வயதை மறுபரீசிலனை செய்ய குழு அமைப்பு

இந்தியாவின் 74-வது சுதந்திர தினத்தையொட்டி பிரதமர் நரேந்திர மோடி டெல்லி செங்கோட்டையில் தேசியக்கொடியேற்றினார். அதன்பின் நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றினார்.

சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி கூறியதாவது:-

பெண்களுக்கு எப்போதெல்லாம் வாய்ப்பு கிடைக்கிறதோ அப்போதெல்லாம் அவர்கள் இந்தியாவை வலிமையடையவும், பெருமையடையவும் செய்கின்றனர். பெண்களுக்கு சுயவேலைவாய்ப்பிலும், வேலைவாய்ப்பிலும் சமமான வாய்ப்புகளை வழங்க நாடு உறுதிபூண்டுள்ளது.

பெண்கள் இன்று நிலக்கரி சுரங்கப்பணிகளிலும் வேலை செய்கின்றனர். நமது மகள்கள் (பெண்கள்) போர் விமானங்களை ஓட்டி வானத்தையும் தொடுகின்றனர்.

நமது மகள்களின் (பெண்களின்) குறைந்தபட்ச திருமண வயதை மறுபரீசிலனை செய்ய குழு ஒன்றை அமைத்துள்ளோம். அந்த குழு தாக்கல் செய்யும் அறிக்கையின் அடிப்படையில் பெண்களின் குறைந்தபட்ச திருமண வயது நிர்ணயம் தொடர்பாக உரிய முடிவு எடுக்கப்படும்.

என அவர் கூறினார்.

இந்தியாவில் பெண்களின் குறைந்தபட்ச திருமண வயது 18 ஆகவும், ஆண்களின் குறைந்தபட்ச திருமண வயது 21 ஆகவும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Previous articleஇந்தியர்களுக்கு ஆஸ்திரேலிய பிரதமர் சுதந்திர தின வாழ்த்து
Next articlePremis makanan kotor di Cameron Highlands diarah tutup

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version