Home உலகம் எட்டு ஆண்டுகளுக்கு கொரோனாவை மூடி மறைத்த சீனா

எட்டு ஆண்டுகளுக்கு கொரோனாவை மூடி மறைத்த சீனா

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பரவல் எட்டு ஆண்டுகளுக்கு முன்பு சீனாவில் ஒரு சுரங்கத் தொழிலாளர்களிடம் இருந்து முதன் முறையாக கண்டறியப்பட்டிருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

கடந்த 2012 ஆம் ஆண்டில் சீனாவின் யுனான் மாகாணத்தில் உள்ள மோஜியாங் சுரங்கத்தில் பணிபுரிந்த 6 பேர் வவ்வால்களின் கழிவுகளை அகற்றும் வேலையை முடித்த பின்னர் நிமோனியா போன்ற நோயால் பாதிக்கப்பட்டனர்.

அவர்களில் மூன்று பேர் காய்ச்சல், வறட்டு இருமல் மற்றும் கொரோனா தொடர்புடைய பிற அறிகுறிகளுடன் பின்னர் இறந்தனர். அது மட்டுமின்றி தொற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இதேபோல் சிகிச்சையும் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக ஆய்வு மேற்கொண்ட இரு நிபுணர்கள், தற்போது அது கொரோனா நோய்த்தொற்றின் முதல் நிகழ்வாக இருந்திருக்கலாம் என்று கருத்து தெரிவித்துள்ளனர். மட்டுமின்றி கொரோனா பரவல் தொடர்பில் அதன் தோற்றம் பற்றி எங்களுக்குத் தெரியும் என்று நாங்கள் நினைத்த அனைத்தையும் மறுபரிசீலனை செய்ய அதில் உள்ள சான்றுகள் வழிவகுத்தன என குறிப்பிட்டுள்ளனர்.

2012-ல் நோய்த்தொற்றால் இறந்த சுரங்கத் தொழிலாளர்களின் மாதிரிகளை தற்போது ஆய்வுக்கு உட்படுத்தியதில் கொரோனா பெருந்தொற்று போன்ற ஒற்றுமை இருப்பதை நிபுணர்கள் குழு கண்டறிந்துள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version