Home இந்தியா பள்ளி முதல்வர்கள், ஆசிரியர்கள் கருத்துக்கள் தெரிவிக்கலாம்

பள்ளி முதல்வர்கள், ஆசிரியர்கள் கருத்துக்கள் தெரிவிக்கலாம்

மத்திய அமைச்சரவை புதிய கல்வி கொள்கைக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த வருட கல்வி ஆண்டிலேயே புதிய கல்வி கொள்கை அமல்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இதற்கிடையில் புதிய கல்வி கொள்கைக்கு எதிர்ப்புகள் கிளம்பி வருகிறது. இந்நிலையில் நாளையில் இருந்து வருகிற 31-ந்தேதி வரை பள்ளி முதல்வர்கள், பள்ளி ஆசிரியர்கள் புதிய கல்வி கொள்கை குறித்து கருத்து தெரிவிக்கலாம் என மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரிலால் தெரிவித்துள்ளார்.

http://innovateindia.mygov.in/nep2020 இந்த இணைய தளத்தில் அவர்களின் விவரத்தை தெரிவித்து, பாடங்களை படித்து பார்க்கலாம். அதில் ஏதும் சேர்க்க, நீக்க வேண்டும் என்று கருதினால் கருத்து தெரிவிக்கலாம் என டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version