Home மலேசியா ஸ்ரீ அமானுக்கு இரண்டாவது நெடுஞ்சாலை

ஸ்ரீ அமானுக்கு இரண்டாவது நெடுஞ்சாலை

ஸ்ரீ அமான் பிரிவில் உள்ள செபூயாவ், லிங்கா , ரோபன் மாவட்டங்கள் வழியாகச் செல்லும் சரவாக் இரண்டாவது நெடுஞ்சாலை திட்டம்,  இந்த பிரிவின் புதிய பொருளாதார சூழலுக்கு உயிரூட் டும் என்று முதலமைச்சர் டத்தோ பாத்திங்கி அபாங் ஜோஹாரி  தெரிவித்தார்.

ஸ்ரீ அமான் பிரிவை அபிவிருத்தி செய்வதற்கான முயற்சிகள் ஸ்ரீ அமான் டெவலப்மெண்ட் ஏரியா (சாடா) எனப்படும்  தலைமை வரைவு மூலம் திரட்டப்படும். இது பொருளாதார வளர்ச்சியின் அடிப்படையில் இப்பகுதியை எவ்வாறு உயர்த்த முடியும் என்பதை மேற்பார்வையிடும் என்றார் அவர்.

புதிய நெடுஞ்சாலை, ஸ்ரீ அமான் பகுதியை விவசாயம், சுற்றுலா நடவடிக்கைகளுக்கு மிகவும்  ஏதுவாக  அமையும் என்று நான் நம்புகிறேன்  என்று  மாநில அளவிலான தேசிய தின கொண்டாட்டத்திற்கு முன்னதாக தனது உரையில் அவர் கூறினார்.

சரவாக் மாநிலம்  உணவு உற்பத்திக்கு பெரும் ஆற்றலைக் கொண்டுள்ளது என்றும், புதிய தொழில்நுட்பங்கள், சந்தைப்படுத்தல் அணுகுமுறைகளைப் பயன்படுத்துவதன் மூலம் அடையக்கூடிய நெல், அன்னாசிப்பழங்கள் போன்ற விவசாய விளைபொருட்களை மாநில ஏற்றுமதியில் ஸ்ரீ அமான் குறிப்பாக பங்களிக்க முடியும் என்றும் அவர் கூறினார்.

கூச்சிங்கிலிருந்து சிபு வரையிலான 225 கிலோமீட்டர் சரவாக் நெடுஞ்சாலை வெ. 6 பில்லியன் மதிப்புடையது.  இது, வடிவமைப்புக்  கட்டத்தில் உள்ளது, மேலும் இந்த ஆண்டு டெண்டர் வழங்கப்படும் என்று அபாங் ஜோஹாரி கூறினார்.

ஜி.பி.எஸ் (கபுங்கான் பார்ட்டி சரவாக்) நிர்வாகத்தின் கீழ் உள்ள மாநில அரசு, ஸ்ரீ அமான் பகுதி  ஏற்கனவே முன்னேறியுள்ள பிற பகுதிகளுக்கு ஏற்ப முன்னேற முடியும் என்பதை உறுதி செய்வதில் உறுதியாக உள்ளது  என்று அவர் மேலும் கூறினார்.

Previous articleலடாக்கில் அத்துமீறிய சீன வீரர்களை…
Next article5,000 அகல் விளக்குகளால் தேசிய தின சின்னம்

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version